Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Posted on November 14, 2022

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவருடைய இணைய பக்கத்தில், ‘:மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என பதிவிட்டிருக்கிறார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme