Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Miral Movie Review -indiastarsnow

Miral Movie Review

Posted on November 11, 2022

குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து மிரள் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது . நடித்த பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரின் நடிப்பு நன்றாக உள்ளது. மிரள் திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பார்ப்பவர்களை பயமுறுத்தும். ஆனால் அந்த பயம் படம் நெடுகிலும் இடம்பெறாமல் போனது படத்தின் பலவீனம். இருந்தாலும் இதில் வரும் திகில் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை ஒரு மெசேஜ் சொல்லி முடித்துள்ளார் இயக்குனர்

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் – வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.

குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை ஹாரர் திரைக்கதை மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

  • தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது..
  • Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union
  • மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு
  • இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
  • NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme