Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
காஃபி வித் காதல் திரை விமர்சனம்!

காஃபி வித் காதல் திரை விமர்சனம்!

Posted on November 5, 2022

ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள், டிடி தங்கை. கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் மீது மோகம் குறைந்து விட, அவர் மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், நல்ல வேலையில் வசதியாக இருக்கும் ஜீவாவை, அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழற்றி விடுகிறார்.

மற்றொரு பக்கம், சிறுவயதில் இருந்து, தன்னை உருகி உருகி காதலித்த நண்பியின் காதலை புரிந்து கொள்ளாமல், அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன், அவரின் காதலை புரிந்து கொள்ளும் ஜெய், அவர் எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஒரு வேளை இந்த முயற்சி தோல்வியடையும் பட்சத்தில், ஊட்டியில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தேவைப்படும் நில உரிமையாளரின் மகளை மணக்கவும் ப்ளான் செய்து வைத்திருக்கிறார். இதற்கிடையே, நில உரிமையாளரின் மகளுக்கும், சோகத்தில் இருக்கும் ஜீவாவுக்கு இடையே காதல் முளைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் ஜீவா.

இதனிடையே அவருக்கு அவசர அவசரமாக வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய, அந்த பெண்ணை ஜீவாவிற்கு கிடைக்கவிடாமல் சதி செய்கிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் சதி செய்ய காரணம் என்ன? ஜெய்யின் காதல் என்ன ஆனது?.. ஜீவாவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் காஃபி வித் காதல் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடிப்பதற்கு ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், எந்தக்கதாபாத்திரமுடனும் நம்மால் கனெக்ட் ஆக முடியவில்லை. சரி என்னதான் நடக்கப்போகிறது என்று இரண்டாம் பாதியை பார்க்க உட்கார்ந்தால், அதன் பின்னர் இடம் பெற்ற எமோஷனும், காமெடிகளும் கொஞ்சம் கூட வொர்க் அவுட் ஆகவில்லை. கஷ்டப்பட்டே சிரிக்க வேண்டி இருந்தது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி ஏமாற்றத்திலும் ஏமாற்றம். பாடலிலும் சரி, பின்னணி இசையிலும் சரி இரண்டிலுமே யுவனின் முத்திரை இல்லை. ஆக மொத்தத்தில் காமெடியையும், காதலையும் வைத்து நம்மை சிரிக்க வைக்கும் காஃபி வித் காதல்.

  • தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது..
  • Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union
  • மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு
  • இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
  • NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme