Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

Posted on September 16, 2022

கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ளது வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. வெந்து தணிந்தது காடு படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகிறது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது, இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முள்ளுக்காட்டினைப் பிழைப்பாகக் கொண்டு வாழும் அளவுக்கு வறுமையும், பஞ்சமும் முத்துவின் குடும்பத்தைப் போட்டு வதைக்கிறது. அதையும் தீ விழுங்கிவிட, உதவி தேடி உறவினர் வீடு நோக்கி நகர்கிறார்கள். அவர் காட்டிய வழியில் மும்பைக்கு விரைகிறார் முத்து. காலையில் பரோட்டா கடையில் வேலை, அந்தி சாய்ந்ததும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடியிசம் என இரு வேறு புதிய உலகங்களுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

இதற்கிடையே பாவையைக் கண்டதும் காதல். ஓர் இரவில் முத்து அடியாள் கூட்டத்தில் எதிர்பார்த்ததைப் போலவே ஹீரோவாக, பெரிய தலைக்கட்டுகள் இருக்கும் வளையத்துக்குள் முன்னேறுகிறார். கர்ஜி கேங், குட்டி பாய் கேங் எனப் பிரிந்து கிடக்கும் ரவுடி மாஃபியாவுக்குள் முத்துவின் படிநிலை என்ன, அவர் கதியும், அவர் சார்ந்த நபர்களின் கதியும் என்னவானது என்பதாக விரிகிறது இந்த ‘வெந்து தணிந்தது காடு’.

முதல் பாதி முழுக்கவே சிம்புவின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஒரு சாதாரண இளைஞன் தன் சொந்த ஊரிலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு வேலைக்கு சென்றால் எப்படி இருப்பானோ, அதை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார். உடல் எடையை அதிகரித்து நடப்பதற்கு சிரமப்பட்ட சிம்பு, ஒரு 21 வயது இளைஞனாக நம்மை நம்ப வைக்கிறார். அவரது எதார்த்தமான நடிப்பு முத்து என்ற கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

முதல் பாதி முழுக்கவே தனது பேச்சு மற்றும் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார். கதாநாயகியாக வரும் சித்திக்கு முதல் பாதையில் பெரிய வேலை எதுவுமில்லை என்றாலும் கதைக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இருக்கிறார். அம்மாவாக வரும் ராதிகா சில காட்சிகளே என்றாலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதல் பாதையின் முடிவில் தொடங்கு அதிரடி கிளைமாக்ஸ் வரை செல்கிறது.

முதல் பாதி எந்த அளவிற்கு மெதுவாக சென்றதோ இரண்டாம் பாத்தே அதே அளவிற்கு வேகமாக செல்கிறது. கௌதம் மேனனா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வெந்து தணிந்தது காடு உள்ளது. ஏஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது போலவே பிஜிஎம்-மிலும் தெறிக்கவிட்டு இருக்கிறார்.

முக்கியமான காட்சிகளில் அவரது பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்கிறது. பொதுவாக கௌதம் மேனின் படங்களில் உள்ள பிரச்சனை இந்த படத்திலும் தொற்றி கொள்கிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையில் தேவையில்லாமல் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் சில கிளைமாக்ஸ் காட்சிகள் வரும், அது போலவே இந்த படத்திலும் ஒரு கிளைமாக்ஸ் காட்சி வருகிறது. இரண்டாம் பகுதி எடுக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டது போல் உள்ளது இந்த கிளைமாக்ஸ். சிலருக்கு இப்படம் மிகவும் மெதுவாக செல்வது போல் இருக்கும், ஒரு சிலருக்கு அதுவும் பிடித்து போகலாம். வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸுக்கு வணக்கத்தை போடு.

  • செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!
  • ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
  • VR Livin Ventures Launches Premium Villa Community in Madhavaram
  • மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme