Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நாட் ரீச்சபிள் திரை விமர்சனம்

நாட் ரீச்சபிள் திரை விமர்சனம்

Posted on September 13, 2022

மூன்று பெண்கள் காணாமல் போகிறார்கள், அதில் இரண்டு பேர் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள், இன்னொரு பெண்ணை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த சம்பவம் பற்றி புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளாக வருகிறார்கள் ஹீரோ விஷ்வா மற்றும் ஹீரோயின் சாய் தன்யா. ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே விவாகரத்து பற்றிய சொந்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விசாரணையில் அந்த பெண்கள் பற்றி கண்டறியும் அதிர்ச்சி விஷயங்கள் தான் படத்தின் பரபரப்பான மீதி கதை.. அவர்கள் எப்படி இறந்தார்கள், இன்னொரு பெண்ணை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை. போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர் முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு போலீஸ் டீம் விரைகிறது. அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்கில் தொங்குகிறாள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லாவண்யா என தெரிகிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த போன் எண் வர்ஷா என்ற பெண் பெயரில் உள்ளது.

வர்ஷாவும் ஆபத்தில் இருப்பதை உணரும் போலீஸ் அவளை தேடுகிறது. இந்த நிலையில், ஹேமா என்ற இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள். மன நலம் பாதித்த அவளை சிகிச்சைக்காக காப்பகத்தில் அவளது அம்மா சேர்க்கிறார். ஹேமா மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படுவது தொடர்கிறது! இதற்கிடையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு கல்லூரி பேராசிரியை கொன்று புதைக்கப்பட்டதை போலீஸ் கண்டறிகிறது.

லாவண்யா கொலைக்கும், பேராசிரியை கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா? இந்த கொலைகளுக்கும் (போலீஸ் உதவியை நாடிய) வர்ஷா காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஹேமாவுக்கு எதனால் மனநலம் பாதித்தது? அதிலிருந்து அவள் மீண்டாளா? என்கிற மர்ம முடிச்சுகளை இடைவேளைக்குப்பின், ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது படம். கதாநாயகன் விஷ்வா, போலீஸ் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.

அவர் விசாரணை நடத்தும் விதம், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாய் தன்யா, சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவிலும், சரண் குமார் இசையிலும் ஆர்வக்கோளாறு தெரிகிறது. பின்னணி இசையில் வாத்தியங்கள் அலறுகின்றன. சந்துரு முருகானந்தம் இயக்கியிருக்கிறார். விறுவிறுப்பாக கதை சொல்ல டைரக்டர் முயற்சித்து இருக்கிறார். திரைக்கதையில் வேகம் போதாது.

  • ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
  • Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme