Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
The Madras Murder

தி மெட்ராஸ் மர்டர் வெப் சீரிஸை

Posted on July 25, 2022

SonyLIV தளம் தனது அடுத்த அதிரடி இணைய தொடரை அறிவித்துள்ளது. 1940 களின் பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட பிரபல மஞ்சள் பத்திரிகையாளரின் கொலையைச் சுற்றி கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் தொடர்புகுள் குறித்து அறியப்படாத சதிகளையும் மர்மங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும். “தி மெட்ராஸ் மர்டர்” என்ற இந்த வெப் சீரிஸை சூரியபிரதாப் S எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குநர் விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை Big Print Pictures பேனரின் கீழ் IB கார்த்திகேயன் தயாரிக்கிறார்.

இத்தொடரின் ஷோ ரன்னர் AL விஜய் கூறுகையில்.., “மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான “தி மெட்ராஸ் மர்டர்” தொடரில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, எங்கள் முழு மூச்சுடன் உழைக்கும். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள்.”

  • ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
  • மெட்ராஸ் முதலை வங்கி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம்; ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக
  • நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்:
  • ஒன்ஸ் மோர் திரை விமர்சனம்
  • அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme