கோல்ட் கால் (Cold Call) திரைப்படம் ஒரு விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் மிஸ்டரி த்ரில்லராக மற்றும் நகைச்சுவை திரை கதையாக உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கோல்ட் கால் திரைக்கதை பெங்களூரில் நான்கு இளைஞர்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மைய கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது , நான்கு இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. அந்த வேலை சரி வர செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்கள் குறிக்கோளாக இருக்கின்றனர் அதே போல் தனது நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் வேலை செய்து கொண்டு வருகின்றனர் அப்போது அவர்களுக்கு தனது நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்; இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி கொடுக்க படுகிறது.
இதற்கு இடையில் பெங்களூரு தொழிலதிபரின் 13 வயது மகன் கடத்தப்படுகிறான். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், மார்க்கெட் ரிசர்ச் எக்ஸிகியூட்டிவ்ஸ் (MRE) ஆக வேலை பார்க்கும் நான்கு இளைஞர்களை முதன்மை சந்தேக நபர்களாகக் கருதுகிறது. இவர்களைச் சுற்றி நகரும் விசாரணையும், கடந்த கால-நிகழ்கால சம்பவங்களின் இணைப்பும் தான் படத்தின் கதை