Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

Posted on September 15, 2026

80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீசாயா முருக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள டிரெய்லர், நடனம், ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருங்கிணைத்து, அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, 80களின் தலைமுறை முதல் இன்றைய Gen Z தலைமுறை வரை வெவ்வேறு காலகட்டங்களின் உணர்வுகளை இணைக்கும் வகையில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘கலைவாணியே’ பாடலுக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’ மற்றும் ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, சார்ட் பஸ்டர் பாடல்களாக உருவெடுத்து, இசை தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.

ஒவ்வொரு பாடலும் தனக்கென தனித்துவமான இசை மற்றும் உணர்வை கொண்டுள்ள நிலையில், ‘மீசாயா முருக்கு 2’ இளமைத் துடிப்பு, காதல், நகைச்சுவை, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளை இசையுடன் இணைக்கும் வண்ணமயமான இசை கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதன் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் இசை விருந்தை வழங்கத் தயாராகி வருகிறார்.

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, சைத்ரா ஜே. ஆச்சார், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டிரெய்லருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பும், சார்ட் பஸ்டர் பாடல்களும் ஏற்படுத்தியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘மீசாயா முருக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசாயா முருக்கு 2’, வழக்கமான திரையரங்க அனுபவத்தைத் தாண்டி, திரையரங்குகளையே ஒரு இசைக் கச்சேரியாக மாற்றும் வண்ணமயமான கொண்டாட்டமாக அமையவுள்ளது.

நடிகர்கள்

  • ஹிப்ஹாப் தமிழா
  • சைத்ரா ஜே ஆச்சார்
  • கேதிகா ஷர்மா
  • ரம்யா ரங்கநாதன்
  • ஹர்ஷத் கான்
  • கருணாஸ்
  • நாசர்
  • ஆடுகளம் நரேன்
  • கருணாகரன்

தொழில்நுட்பக் கலைஞர்கள்
கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்
இசை: ஹிப்ஹாப் தமிழா
படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்
புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி
நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
DI: Knack Studios
கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்
VFX: 85FX, Hocus Pocus
கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D
டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார்
மார்க்கெட்டிங்: Bonk Digital
புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz
முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன்
காஸ்ட்யூமர்: அருண்
ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா
ஒலிக்கலவை: கண்ணன் கணபத்
ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார்
புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C
புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

  • சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு
  • “I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan
  • என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme