
வைல்ட் தமிழ்நாடு வெறும் ஆவணப்படமாக இல்லாமல் ஒரு கலைப் படைப்பாகவே சிறப்பாக அமைந்துள்ளது இதில் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்து உயிர்களின் வாழ்வியலை சங்க இலக்கியத்தின் ஐந்திணைகள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) ஆகியவற்றை கதையாக கொண்டு அவற்றினுள் வாழும் உயிரினங்களின் வாழ்வியலை திரைக்கதையாக அமைத்து அதனை வெள்ளி திரையில் அனைத்து வயதினரும் ரசிக்கும் படியாக அமைத்துள்ளது மிக சிறப்பு .
மேற்குத் தொடர்ச்சி மலை முதல் கடலடி உயிரினங்கள் வரை தரமான படப்பிடிப்பின் மூலம் தமிழ்நாட்டின் அரிய வனவிலங்கு அவற்றின் வாழ்வியல் தருணங்கள் வைல்ட் தமிழ்நாடு என்ற ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாகப் 1 மணி நேரம் ஆவணப்படமாக அதற்கு பின்னனி இசை மற்றும் பின்னணி குரல் கொடுத்து திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.
வைல்ட் தமிழ்நாடு ஆவண திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் அரவிந்த் சாமியின் (ENGLISH SPEECH) வசீகரமான ஆங்கில பின்னணிக் குரல் (Narration) திரையில் ரசிக்க வைத்துள்ளது.
கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் (Ricky Kej) வைல்ட் தமிழ்நாடு ஆவண திரைப்படத்திற்கு பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது குறிப்பாக பின்னணி இசை மற்றும் விலங்குகளின் அசைவுகள் மற்றும் ஒளியை நேர்த்தியாக பதிவு செய்து திரையில் காண்பவரை காடுகளின் சூழலை நேரில் காண்பது போன்ற உணர்வைத் ஏற்படுத்துகிறது.
இன்று திங்கள் கிழமை 7/09/2026 திரையரங்குகளில் வைல்ட் தமிழ்நாடு ஆவணப்படம் வெளியாகி உள்ளது திரைப்படத்திற்கு பின்னணி குரல் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யோகம் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்பொழுது பத்திரிக்கையாளரிடம் படப்பிடிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட படக்குவினர் இந்த ஒரு மணிநேர ஆவணப்படத்திற்கு 5 ஆண்டுகள் களப்பணியில், 300 நாட்களுக்கு மேல் காடுகளில் தங்கி படப்பிடிப்புக்கு செய்ததாகவும் தெரிவித்தனர் . தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை இதுவரை கண்டிராத கோணத்தில் காட்டியுள்ளதால், இது குடும்பத்துடனும், குறிப்பாக குழந்தைகளுடனும் திரையரங்குகளில் கொண்டாட கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.