Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!7

Posted on August 29, 2026

Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர்.முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை,மக்களின் இரத்தமும் சதையுமான வாழ்க்கைக்குள் சென்று பதிவு செய்யும் ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி சாமி வந்து ஆவேசமாக ஆடும் தோற்றத்தில் தீவிரமான பார்வையுடன் காட்சியளிக்கிறார். பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிக பின்னணியை வெளிப்படுத்துகிறது.‘வேட்ட சாமி’ படத்தின் கிளிம்ப்ஸ், வில்லிசை கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கி, பாரம்பரிய தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. கிராமிய வாழ்வியலுடன் ஆன்மீக உணர்வையும் கலந்து அமைக்கப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகின்றன.இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி எஸ் கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பம்பர் படத்தை இயக்கிய M. செல்வகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக G. துரைராஜ், சண்டைப்பயிற்சியை சிறுத்தை கணேஷ் கவனித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme