2028-ஆம் ஆண்டிற்குள் தென்னிந்தியா முழுவதும் 300 விற்பனையகங்களை இயக்க திட்டமிடும் காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ்
15 GoFix பிரீமியம் தனித்து இயங்கும் சேவை மையங்களை மார்ச் 2027-க்குள் நிறுவுகிறது


- காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் தனது மாபெரும் விரிவாக்கப் பயணத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில் தனது புதிய பெருநிறுவன அலுவலகத்தை சென்னை மாநகரில் இன்று திறந்துள்ளது.
- GoGizmo மற்றும் GoFix உள்ளிட்ட எட்டு பிராண்டுகள் மூலம், சில்லறை விற்பனை, பழுதுபார்த்தல், பாதுகாப்பு, திரும்பப் பெறுதல், புதுப்பித்தல், உதிரிபாகங்கள், விநியோகம், மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தரவு சேவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நுகர்வோர் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது
சென்னை, ஆகஸ்ட் 21, 2026: மின்னணு (எலக்ட்ரானிக்) சாதனங்களின் சில்லறை விற்பனை, பழுதுநீக்கல் மற்றும் தரம் உயர்த்துதல் போன்ற சேவைகளை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ், தற்போது தமிழ்நாடு முழுவதும் 30 ரீடெய்ல் மற்றும் சேவை மையங்கள் வழியாக இயங்கி வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்கள் உட்பட, 2028-ஆம் ஆண்டுக்குள் 300 மையங்களாக உயர்த்த ஒரு மிகப்பெரிய விரிவாக்க திட்டத்தை இந்நிறுவனம் வகுத்துள்ளது.
இந்நிறுவனம், கோகிஸ்மோ, கோஃபிக்ஸ், கோகேர், கோகேஷின், கோரெனீயூ, கோபல்ஸ், கோஅலையன்ஸ் மற்றும் கோஸ்டேக் உள்ளிட்ட பிரத்தியேக பிராண்டுகளின் தொகுப்போடு பன்முகத்தன்மை வாய்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைந்து இந்த பிராண்டுகள், நுகர்வோர் மின்னணு சாதனங்களின் பல்வேறு பயன்பாட்டு நிலைகளில் வாடிக்கையாளர்களுக்கு ரீடெய்ல் விற்பனை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. உருவாக்குகின்றன.
காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ் – ன் விரிவாக்கத் திட்டங்களில், ஒருங்கிணைந்த GoGizmo-GoFix மையங்களை அதிகரிப்பது மற்றும் பிரத்யேகமாக இயங்கும் புதிய தலைமுறை ‘பிரீமியம் GoFix சேவை மற்றும் அனுபவ மையங்களை’ உருவாக்குவது ஆகியவை அடங்கும். முதற்கட்டமாக, சென்னை மற்றும் பெங்களூருவில் தலா ஐந்து பிரீமியம் மையங்களை தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வழக்கமான பழுதுபார்க்கும் பணிக்கான சர்வீஸ் மையங்களுக்கு மாற்றாக, மேம்பட்ட பழுதுநீக்கல் திறன்களுடன் வாடிக்கையாளருக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்கும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த மையங்கள் செயல்படும்.
இந்த விரிவாக்கத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ் தனது புதிய பெருநிறுவன அலுவலகத்தை சென்னையில் இன்று திறந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரியத் துறை அமைச்சர் திரு. ஏ.எம். ஷாஜகான் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், BAZ குழும நிறுவனங்களின் தலைமை இயக்க அதிகாரி திரு. ஷர்புதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், பங்காளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் திரளாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஒரு வாடிக்கையாளர் மின்னணு சாதனத்தை வாங்குவது முதல், அதைப் பாதுகாப்பது, பழுதுபார்ப்பது, பராமரிப்பது, மற்றும் இறுதியாக அதை விற்பது, புதுப்பிப்பது அல்லது அதை தரம் உயர்த்துவது வரை, அந்த சாதனம் செயல்படும் முழு காலஅளவிலும் வாடிக்கையாளரோடு இணைந்திருக்கும் மிகச்சிறந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுப்பதே காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸின் நீண்டகால லட்சியமாகும்.
இது குறித்து காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ் – ன் நிர்வாக இயக்குநர் திரு. முகமது ரஃபி சேட் கூறுகையில், “எங்கள் தொலைநோக்குப் பார்வை, ஒரு பெரிய சில்லறை விற்பனை அல்லது பழுதுபார்க்கும் சர்வீஸ் மையங்களின் தொகுப்பை உருவாக்குவது என்பதையும் கடந்ததாகும். வாடிக்கையாளர்களின் சாதனங்கள் பயன்படுத்தப்படும் முழு காலத்திலும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து சேவை வழங்குகின்ற ஒரு ஒருங்கிணைந்த நுகர்வோர் தொழில்நுட்ப கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். சாதனங்களை வாங்குவது முதல் அவற்றின் பாதுகாப்பு, பழுதுபார்த்தல், மறுவிற்பனை, புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் வரை ஒவ்வொரு கட்டத்தையும் வாடிக்கையாளருக்கு எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும், மதிப்புமிக்கதாகவும் மாற்ற நாங்கள் விரும்புகிறோம். எத்தனை சாதனங்களை விற்கிறோம் என்பதில் அல்ல, மாறாக வாடிக்கையாளர்களின் தொழில்நுட்ப பயணத்தில் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளதாகவும் பொறுப்புடனும் நாங்கள் சேவை செய்கிறோம் என்பதில்தான் எங்களின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸின் அடுத்தகட்ட வளர்ச்சியில், ‘தனித்து செயல்படும் கோஃபிக்ஸ் பிரீமியம் மல்ட்டி-பிராண்டு மூன்றாம் தரப்பு சேவை மற்றும் அனுபவ மையங்களை’ நிறுவுவது முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த புதிய மையங்களில், பிரத்யேக வரவேற்பறை, உதவி மையங்கள், சார்ஜிங் வசதியுடன் கூடிய வாடிக்கையாளர் ஓய்வறைகள், உதிரிபாகங்கள் பிரிவுகள் மற்றும் நேரடி காணக்கூடிய சேவை மையங்கள் ஆகியவற்றுடன் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பணிநிலையங்களும், பழுதுபார்ப்பதற்கான பின்புல கட்டமைப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும். மின்னணு சாதனங்களைப் பழுதுபார்க்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வெளிப்படையான, வசதியான மற்றும் ஈடுபாடுடையதாக மேம்படுத்தும் வகையில் இந்த மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
திரு. முகமது ரஃபி சேட் மேலும் கூறுகையில்: “நம்பிக்கையே பழுதுபார்க்கும் சேவையின் அடிப்படை அம்சமாகும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய மிகவும் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட சாதனங்களை எங்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. எங்களின் கோஃபிக்ஸ் சர்வீஸ் மற்றும் அனுபவ மையங்கள், சேவை / பழுதுபார்ப்பு பணி நடைபெறும் சூழலை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்க்கக்கூடியவாறு வெளிப்படையான செயல்பாடாக ஆக்குவதன் வழியாக இந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் சாதனங்கள் தொழில்முறை நிபுணத்துவத்துடனும், பொறுப்புடனும், அதிக கவனத்துடனும் இங்கு கையாளப்படுகின்றன என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.
2017-ஆம் ஆண்டில் GoGizmo மூலம் நுகர்வோருக்கான சில்லறை விற்பனைத் துறையில் நுழைந்த காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ், 2022-ஆம் ஆண்டில் கோஃபிக்ஸ் – ஐ அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், மின்னணு சாதனங்களின் பயன்பாட்டு காலம் முழுவதற்கும் பயன்படும் வகையில் தனது சேவைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் சேவைக் கட்டமைப்பானது, GoGizmo, GoFix, GoCare, GoCashin, GoRenew, GoPulse, GoAlliance மற்றும் GoStack போன்ற பிராண்டுகள் மூலம் சில்லறை விற்பனை, மல்டி-பிராண்டு சாதனங்களின் பழுதுபார்த்தல் மற்றும் பரிசோதனை, சாதனப் பாதுகாப்பு, பைபேக், புதுப்பிக்கும் தொழில்நுட்பம், உதிரிபாகங்கள், விநியோகம், மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகள் என பல பிரிவுகளில் பரந்து விரிந்துள்ளது.
இந்த வணிகங்கள் அனைத்தும் இணைந்து, ஒரு சாதனத்தை வாங்குவது, பாதுகாப்பது, பழுதுபார்ப்பது, விற்பது, புதுப்பிப்பது மற்றும் மேம்படுத்துவது என பல்வேறு நிலைகளில் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட காங்க்ருவென்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு உதவுகின்றன. தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ஒருங்கிணைந்த தொழில்நுட்பம், சேவை மற்றும் சுழற்சி-வர்த்தக கட்டமைப்பின் ஆதரவுடன் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்குவதே இக்குழுமத்தின் முதன்மை நோக்கமாகும்.
