Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

Posted on August 19, 2026

ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் ‘நய்யி நவெல்லி’, இந்த வருடம் அக்டோபர் 16ஆம் தேதி தசரா பண்டிகைக்கு நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும். ‘நய்யி நவெல்லி’ 2026 அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குழப்பங்கள் நிறைந்த மீரட் குடும்பத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள் கதாநாயகி. ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அனைத்திலும் சிறப்பாகத் தோன்றும் அண்ணி உண்மையில் ஒரு சூனியக்காரியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்திய SVOD ஒரிஜினல்ஸ் பிரிவின் இயக்குநரும் தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், “’நய்யி நவெல்லி’ திரைப்படம் நிச்சயமாக தசரா பண்டிகைக்கானது என்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் இருந்தது. இதைவிட சிறந்த வெளியீட்டுத் தேதி இருக்க முடியாது. யாமி கெளதம் தர் அற்புதமாக நடித்துள்ளார். படக்குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளோம். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனத்துடன் இணைந்து, இந்த தசராவுக்கு குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக ‘நய்யி நவெல்லி’ இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் ஆனந்த் எல். ராய் கூறுகையில், “ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் கதையாக ‘நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. ஹிமான்ஷுவும் நானும் முதன்முதலில் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோதே, ஃபேன்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்து குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான அன்பு மற்றும் குறும்புத்தனத்தை யாமி கெளதம் தர் நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பல புதுமையான கதைகளை கொடுத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் முதன்முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

நகைச்சுவை, குழப்பம் மற்றும் பிரம்மாண்டமான பண்டிகை கொண்டாட்டம் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ‘நய்யி நவெல்லி’, பெரிய திரையில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தை தரவிருக்கிறது. அக்டோபர் 16, 2026 முதல் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்கில் இந்த பிரம்மாண்டமான குடும்ப ஃபேன்டஸி உலகத்தை காணத் தயாராகுங்கள்!

  • சோழ தேசம்” கண்காட்சி அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திய நடிகர் மற்றும் கலைஞர் சிவகுமார்!
  • 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த LIGHTZ ÖN AWARDS
  • காவேரி மருத்துவமனை தனது சென்னை மருத்துவமனைகள் முழுவதும் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் பராமரிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது.
  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’
  • Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe’ Audio Launch held in ChennaiThe audio launch of ‘Paris Cafe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme