Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

Posted on August 10, 2026

இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் ‘AAA சினிமாஸ்’ பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது!

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸை’ பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்.

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ‘AAA சினிமாஸ்’ இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை ‘AAA சினிமாஸ்’ உருவாக்கியுள்ளது.

‘AAA சினிமாஸ்’ என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா அனுபவத்தை தரும் முயற்சிதான் இது. அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய தலைமுறைக்கான பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குவதே இந்த பிராண்டின் நோக்கமாகும்.

திரையைத் தாண்டியும் பல்வேறு பிரீமியம் வசதிகளை ‘AAA சினிமாஸ்’ வழங்குகிறது. ரெக்ளைனர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்காக பிரத்யேக ஐகான் ஸ்டார் லெளன்ச், தனி விஐபி நுழைவாயில் மற்றும் பிரீமியம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. சினிமா மூலம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்தையே இந்த புதிய தொடக்கம் பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் திரைப்படங்களை இன்னும் நெருக்கமாகவும், பிரம்மாண்டமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் ரசிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

‘AAA சினிமாஸி’ன் தொடக்கம், விசாகப்பட்டினத்தின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், பிரீமியம் வசதி மற்றும் சினிமாவின் மாயாஜாலம் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் புதிய அனுபவத்தை இது வழங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’ மூலம், அல்லு அர்ஜுன் திரைக்கு அப்பாற்பட்ட தனது பொழுதுபோக்கு பயணத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme