
கோவை மாவட்டத்தின் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த GD நாயுடு சிறு வயதில் மோட்டார் வாகனங்கள் மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டவராக வளர்க்கிறார் மற்றும் வேளாண்மை தொழில் செய்து வருகிறார், GD நாயுடு உறவினர் பருத்தி கிடங்கில் வேலைக்கு சேர்த்து விடு அங்கு வேலை செய்து வருகிறார் வருகிறார் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. அந்த வாகனத்தை வாங்குவதற்காக சேமித்த காசு, மனைவியின் (ஷீலா) நகை போன்றவற்றை விற்று அதே மோட்டர் சைக்கிளை அவரிடமிருந்து வாங்க செல்லும் பொழுது தினக் கூலி விவசாயிகள் ஊதியம் பற்றாமல் போராட்டம் நடத்த சேமித்த காசை அவரிடம் கொடுத்துவிட்டு விடு திரும்புகிறார் GD நாயுடு.
அதன் பின்பு தனது கனவை நிறைவேற்ற ஒரு வருடம் உணவகத்தில் வேலை பார்த்து அந்த இருசக்கர வாகனத்தை சொந்தமாக வாங்குகிறார் அதன்பின்பு அந்த வாகனத்தை உள்ள தொழில்நுட்பங்களை பிரித்துப்போட்டு அதன் மொத்த இயங்குமுறையையும் கற்கிறார் ஜி.டி.என். அதன் காரணமாகக் கிடைக்கும் இயந்திரவியல் அறிவைக்கொண்டு, அன்றாடம் தேவைகளுக்கான சின்ன சின்ன கருவிகளைத் தன் சொந்த முயற்சியால் கண்டுபிடிப்பதோடு, அவற்றை வைத்து தொழிலதிபராகவும் உயர்கிறார் ஜி.டி.என் (மாதவன்).
ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகள் சாமானிய மக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தவும் மக்கள் பயன்படும் வகையிலும் கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் செய்யும் ஜி.டி.என்-இன் வளர்ச்சியைப் பிடிக்காத இந்தியர்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரி, அவர்மீது பொய்க் வரியைப்பு குற்றச்சாட்டுகளையும் கட்டமைப்பதோடு, அதற்கு வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ணனையும் (ஜெயராம்) பயன்படுத்துகிறார்.
சாமானிய மனிதனாக GD நாயுடு சமுதாயத்தில் அதிகாரம் படைத்தவர்களின் அடக்கு முறையையும் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து ஜி.டி. நாயுடு எப்படி வென்று காட்டுகிறார் என்பதே கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கும் ‘ஜி.டி.என்’ படத்தின் கதை.
சத்யராஜ்,துஷாரா, கருணாகரன், முரளிதரன், பிரியாமணி ஆகியோர் கவனத்தில் நிற்க, வினய், தம்பி ராமையா, ஷீலா, அதீதி பாலன், மோகன் ராமன், ரமேஷ் திலக் போன்றோர் தங்களது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது இவர்களது நடிப்பு