Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!

Posted on July 21, 2026

படத்தின் பெயர்: லைஃப் இன் லூம்,
நேரம்: 1 மணி 40 நிமிடங்கள்
மொழிகள்: தமிழ், இந்தி, அசாமி, வங்காளம், லடாகி, ரெமோ மற்றும் ஆங்கிலம்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவான ‘லைஃப் இன் லூம் மூலம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருதில் ’நான் ஃபீச்சர் ஃபிலிம்’ (Non-Feature Film) பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது வென்று சாதனை படைத்துள்ளது. ஆவணப்படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான எட்மண்ட் ரான்சன் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் தயாரித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பு, கேமரா மற்றும் திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு விடுதல், போஸ்ட் புரொடக்ஷன், ஸ்டுடியோ வசதிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் என எண்டர்டெயின்மெண்ட் துறையில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக கடந்த 15 ஆண்டுகளாக மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் திகழ்கிறது. தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸ் தலைமையில், ’ஓயீ’ என்ற திரைப்படம் மற்றும் தேசிய விருது பெற்ற ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படம் உள்ளிட்ட பல தரமான படைப்புகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் ஏழு மாநிலங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைத்தறி கலாச்சாரத்தை 100 நிமிடங்கள் ஓடும் ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படம் ஆழமாக பதிவு செய்கிறது. குஜராத்தின் அரச மரபு கொண்ட பதன் படோலா நெசவு முதல், ஒடிசாவின் போண்டா பழங்குடியினரின் ரிங்கா நெசவு வரை பல்வேறு நெசவு மரபுகளை இப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. விரைவான சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியிலும், பல நூற்றாண்டுகள் பழமையானதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான நெசவு முறைகளைக் காக்கப் போராடும் கைவினைஞர்களின் மன உறுதியை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது.

‘லைஃப் இன் லூம்’ஆவணப்படம் தேசிய மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

72வது தேசிய திரைப்பட விருதுகள் (2026) – சிறந்த ஒளிப்பதிவு (நான் ஃபீச்சர் ஃபிலிம்),
செலிபிரேட்டிங் இந்தியா ஃபிலிம் ஃபெஸ்டிவல் (2025) – சிறந்த ஆவணப்படம்,
18வது மும்பை சர்வதேச திரைப்பட விழா (MIFF) – இந்தியா இன் அம்ரித் கால் தேசிய போட்டிப் பிரிவில் சிறந்த ஆவணப்படம்,
54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), கோவா (2023) – அதிகாரப்பூர்வ தேர்வு,
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (2023) – சிறந்த அறிமுக இயக்குநர்,
தாகூர் சர்வதேச திரைப்பட விழா – சிறந்த ஆவணப்படம்,
தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சன் ஆஃப் ஈஸ்ட் விருது – தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸுக்கு கௌரவ சாதனையாளர் விருது,
மதுரை சர்வதேச ஆவணப்பட விழா – அதிகாரப்பூர்வ தேர்வு.

இயக்குநர் எட்மண்ட் ரான்சன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் 85 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தி, பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கை, இயற்கையுடனான அவர்களின் உறவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நெசவு முறைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த ஆவணப்படம் நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இந்தியா முழுவதும் நடைபெற்ற திரைப்பட விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

72வது தேசிய திரைப்பட விருதில் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம், மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமைமிகு தருணம். தரமான திரைப்படத் தயாரிப்புக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் அதன் உறுதியையும் மீண்டும் ஒருமுறை இந்த விருது உறுதிப்படுத்துகிறது. ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படம், இந்திய கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் வாழ்வியல் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் பாரம்பரியத்தின் நிலையான மரபை எதிர்கால சந்ததியினருக்காக பதிவு செய்திருக்கும் அரிய கலைப்படைப்பாக திகழ்கிறது.

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme