Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில் ஒன்பதாவது படமான *வாணவேடிக்கை* திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது…

Posted on July 16, 2026

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில் ஒன்பதாவது படமான *வாணவேடிக்கை* திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது… சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜையில் பிரேமதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய,தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்MP அவர்கள் மனைவியார் பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.இப்படத்தை நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் *திரு* இயக்குகிறார்.. இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்..மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன்,கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்..இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். கலை இயக்கம் ராஜ்கமல்,படத்தொகுப்பு பிரேம்குமார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது..இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறுகையில்..இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்த படத்தில் பார்ப்பீர்கள்..இப்படம் தந்தைக்கு மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம் என்றவர் படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்புகளை படபிடிப்பு முடிந்தவுடன் அறிவிக்கிறோம் எனக் கூறினார்…

  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme