Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*யுனிவர்சல் பிக்சர்ஸ்* வழங்கும் *”தி ஒடிஸி

Posted on July 16, 2026

*யுனிவர்சல் பிக்சர்ஸ்* வழங்கும் *”தி ஒடிஸி”*கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி (The Odyssey)’ என்பது முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை, இப்படம் உலகளாவிய திரைகளுக்குக் கொண்டு வருகிறது. நோலனின் முந்தைய படைப்புகளான ‘தி டார்க் நைட்’ முத்தொகுப்பு, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து, 6 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்த வருடத்தின் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாகும்! இது நோலனின் 13 ஆவது முழுநீளத் திரைப்படமாகும். மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கவுள்ளது.*கதைச்சுருக்கம்* – இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.*நடிகர்கள்*மேட் டாமன் – ஒடிசியஸ், இத்தாகாவின் அரசன்டாம் ஹாலண்ட் – டெலிமக்கஸ், ஒடொசியஸின் மகன்ஆன் ஹாத்வே – பெனிலோப், இத்தாகாவின் அரசிராபர்ட் பேட்டர்சன்லூபிடா நியாங்கோசம்ந்தா மார்டன் *தொழில்நுட்பக் குழு:*ஒளிப்பதிவு – ஹாய்டே வான் ஹாய்டெமா இசை – லுட்விக் கோர்டான்சன் படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் – ஸ்காட் ஃபிஷர்விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்- ஆண்ட்ரூ ஜாக்சன்உடை வடிவமைப்பு – எலன் மிரோஜ்னிக்*யுனிவர்சல் பிக்சர்ஸ்* வெளியீடு

  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme