Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள”இருள் சூழும் இரவினிலே”

Posted on July 15, 2026

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் “இருள் சூழும் இரவினிலே”. கமர்ஷியல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில்,வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

“சிறந்த திரைக்கதையால் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘இருள் சூழும் இரவினிலே’யும் இடம்பிடிக்கும்” என்ற நம்பிக்கையை இயக்குநர் சிவராம் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் டீசர் Moviebuff யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் வயலன்ட் வேலு மேற்பார்வையில் படமாக்கியுள்ளனர். இது அவரது 100 வது திரைப்படம் என்பதும் சிறப்பம்சமாகும். இசை விஷ்னுவர்தன், கேமராமேன் அருண் சுஷில்.

பழனியைச் சேர்ந்த எம். பாலா இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையின் கலவையாக உருவாகியுள்ள “இருள் சூழும் இரவினிலே” ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
நடிகர்கள்: சிவராம், ரேகா ரமேஷ், நைடிலே ஷைவா, நந்தா கோபால், கீதா, அன்னபூர்ணா, அரவிந்த் மற்றும் பலர்.
இசை: விஷ்ணுவர்தன்
சண்டைக் காட்சிகள்: வயலன்ட் வேலு (100-வது திரைப்படம்)
ஒளிப்பதிவு: அருண் சுஷில், அனில் கிருஷ்ணா
படத்தொகுப்பு: அரவிந்த் ஜே.பி.
DI: நிகில் கரியப்பா
உடை வடிவமைப்பு: குமார்
தயாரிப்பு மேலாளர்: நாகேஷ்
கலை இயக்கம்: சச்சின்
ஒப்பனை: நந்தீஷ், சங்கர் ரத்தோட்
டிசைன் & VFX: பரதிராஜா
நடன அமைப்பு: ராஜ் தேவ்
PRO -Sivakumar
போஸ்ட் புரொடக்ஷன்: சிவானி ஸ்டுடியோஸ்

IrulSoozhumIravinile #TamilMovie #TamilCinema #HorrorComedy #CommercialEntertainer #Shivaram #SaiBabaPictures #Moviebuff #TamilFilm #UpcomingMovie #ViolentVelu #100thFilm #Vishnuvardhan #ArunSushil #MBala #Kollywood #TamilEntertainment #MovieTeaser #CinemaNews #TamilFilmUpdates

  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் (Hansa Entertainment ) தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !
  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme