Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!*

Posted on June 29, 2026

*மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!*பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.நடிகர்என்.டி.ஆர்தொழில்நுட்பக் குழுதயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்இசை: அனிருத் ரவிச்சந்தர்*Man of Masses NTR & Visionary Filmmaker Trivikram Srinivas Reunite for a Grand Divine Cinematic Spectacle Produced by Haarika & Hassine Creations & NTR Arts*The wait is finally over. After years of anticipation and countless conversations among fans, Man of Masses NTR and visionary filmmaker Trivikram Srinivas officially reunite for one of the most awaited films in Indian cinema. Following the blockbuster success of Aravinda Sametha Veera Raghava, the celebrated actor-director duo is set to embark on an extraordinary cinematic journey.The project was officially announced by NTR through X platform. Featuring a trident and spear merging alongside a DNA motif, the poster carries the intriguing tagline, “One Spear, One Purpose… One Divine Reckoning.” The makers have positioned the film as a grand mythological spectacle, promising a divine cinematic experience inspired by mythology and rooted in powerful storytelling.Conceived on a grand scale and rooted in divinity, the film promises a powerful blend of mythology-inspired storytelling, intense emotions, breathtaking action and spectacular world building. The project brings together an exceptional creative team. Acclaimed Music composer Anirudh Ravichander comes on board to create a massive musical experience adding another exciting dimension to this magnum opus.The film will be jointly produced by S. Radha Krishna (China Babu) under the prestigious Haarika & Hassine Creations banner and Nandamuri Kalyan Ram under NTR Arts. With one of Telugu cinema’s most successful actor-director collaborations joining hands once again backed by two powerhouse production houses, the film is set to become one of the biggest cinematic spectacles ever mounted.Further details regarding the cast, technical crew and production schedule will be announced soon.Cast: Man of Masses NTRTechnical Crew:Banner: Haarika & Hassine Creations, NTR ArtsProducers: S. Radha Krishna (China Babu), Nandamuri Kalyan RamWritten & Directed by : Trivikram SrinivasMusic: Anirudh Ravichander

  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
  • From Madurai to the Silver Screen — Eesha, the New Hero Introduced Through Habeebi!
  • *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme