Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

எங்கள் தங்கம் திரை விமர்சனம்

Posted on June 21, 2026

எங்கள் தங்கம் திரைப்படத்தின் நாயகி (சொர்ணா) (ஜான்சிராணி) என்ற இரு பெயர்களில் வாழ்ந்து வருகிறார் சமந்தா அதன் பின்னணி என்ன என்பது படத்தின் திரைக்கதை.

பெண்களின் பாலியல் ரீதியாக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வான ஒரு திரை கதையாகவும் பெண்களின் மன தைரியத்தை வலுப்படுத்தும் பெண்ணின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டு திரையில் பெண்களின் வீரத்தை ரசிக்கவும் பெண்களின் பயத்தை சிந்திக்கவும் வைத்துள்ளது எங்கள் தங்கம் திரைப்படத்தின் திரைக்கதை.

நாயகி சமந்தா சிறுவயதில் ஆதரவற்றோர் பள்ளியில் பயில்கிறார் அங்கு தனது தோழிக்கும் சகா பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வார்டன் மூலமாக அவர்களிடம் இருந்து சமந்தா தன் தோழியையும் மற்ற பெண்களையும் காப்பாற்றுகிறார் அதேசமயம் தன் தோழி வேறொருவர் தத்து எடுக்க பிரிவை தாங்க முடியாமலும் வாடுகிறார் நாயகி. அதே சமயம் வார்டன் பார்வை சமந்தா மீது பாலில் தொந்தரவாக தொடர அங்கிருந்து தப்பித்து செல்கிறார் பல்வேறு இடங்களில் வேலை செய்தும் படித்து வரும் சமந்தா தங்கம் விடுதியில் தங்கிக் கொண்டு பகுதி நேரமாக லாட்ஜிலும் வேலை செய்கிறார் அப்பொழுது அங்கு வரும் ரவுடி கும்பல் இடம் உதவி கேட்க கூட்டத்தின் தலைவன் கர்ணா அவரையும் தனது இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அவருக்கு ஜான்சிராணி என்று பெயரிட்டு பயிற்சி கொடுக்கிறார் அதன் மூலம் தான் ஒரு தைரியசாலியான பெண்ணாக சமுதாயத்தில் புதிய அவதாரத்தை மேற்கொள்கிறார் ஜான்சி ராணி ஆக சமந்தா.

எங்கள் தங்கம் நாயகி சமந்தா ஸ்வர்ணாவாக தன் காதல் கணவருடன் அவருடைய கிராமத்திற்கு வருகிறார் நாயகன் தனது தங்கை திருமணத்துகாகவும் சமந்தாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு திகந்த் வருகிறார் அங்க அவர் அப்பா அம்மா இருவரும் எதிர்ப்பு தெரிவிக்க தனது தம்பியின் வற்புறுத்தலால் திருமண நிகழ்ச்சிக்கு வரும் நாளைக்கு சமந்தா நாயகனும் முதலில் ஏற்க மறுக்கும் குடும்பத்தினர் பின்பு திருமண வரை தங்கிக் கொள்ளுமாறு அனுமதி கொடுக்கின்றனர் இதனை பயன்படுத்தி தன் கணவர் குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று சமந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் அதனை திரையில் காணும் பொழுது ரசிக்கவும் சுவாரஸ்யமாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி குடும்பப் பெண்ணாகவும் சண்டைக் காட்சிகளை சிறப்பாக செயல்பட்டு ஜான்சி ராணியாக திரையில் மிரட்டி உள்ளார் நாயகி சமந்தா.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், தரமாக அமைந்துள்ளன..

இயக்குனர் நந்தினி ரெட்டி. சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை மையமாக வைத்தும் குடும்ப உறவுகளை நிஜமாக வைத்தும் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது எங்கள் தங்கம் திரைப்படத்தின் திரைக்கதை

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme