Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???

Posted on June 10, 2026

முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்துபிதாமகனே போய்விட்டாயா?கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா?எங்கள்மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?அடைத்துக் கிடந்ததிரையுலகக் கதவுகளைத்திறந்தவெளிக்குத்திறந்துவிட்டவனே!ஆகாயத்திற்கு அடுத்துஅதிக நட்சத்திரங்களைஅறிமுகம் செய்தவனே!என்னையும்சுயமரியாதையோடுசுடரொளி வீசச்செய்தவனே!உடன்பிறப்பேரத்தத்தின் ரத்தமே என்றதலைவர்களின் மொழிக்கு இணையாகஎன் இனிய தமிழ்மக்களேஎன்ற ரத்தினச் சொற்களுக்குமுத்திரை சேர்த்தவனே!நீ மாயக்காரன்புழுதியைப் பொன்செய்தாய்சினிமாவின் நிறம்வெள்ளையென்று இருந்ததைகருப்பென்று மாற்றியகலையாளன் நீ!இடிந்த சுவர்களும்உடைந்த மனிதர்களும்கிழிந்த வாழ்க்கையும்உன் கலையின் கச்சாப் பொருட்கள்இந்தக் கரட்டுப்பட்டியைத் தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்தஅல்லிநகரத்து அரசன் நீஇனி நான் எப்படித்தனியாகத் தேனி போவேன்?மேற்குத் தொடர்ச்சி மலைஅருவிகளால் அழுதுகொண்டேகேட்குமே…எங்கே பாரதிராஜா?கத்தாழங்காட்டுக் கரிச்சான் கேட்குமே…எங்கே பாரதிராஜா?கருவேலமரம் கேட்குமேஎங்கே பாரதிராஜா?என்ன பதில் சொல்வேன்?எப்படிநான் தனித்திருப்பேன்?நீ தூரிகைநான் வண்ணம்நான் தூரிகைநீ வண்ணம்தூரிகை இல்லாமல் வண்ணமும்வண்ணம் இல்லாமல் தூரிகையும்என்னத்துக்காகும்?நீ அரிவாள்நான் கைப்பிடிநான் அரிவாள்நீ கைப்பிடிஅரிவாள் இல்லாத கைப்பிடியும்கைப்பிடி இல்லாத அரிவாளும்என்னத்துக்காகும்?என்னை அழவிடுஉடம்பின் உப்பெல்லாம்கண்ணீராய்க் கரையட்டும்இனி என்ன எழுத?நடிகர் திலகம் போல்நானும் புலம்புகிறேன்‘பூங்காத்து திரும்புமா?எம் பாட்ட விரும்புமா?பாராட்ட – மடியில் வச்சுத் தாலாட்டஎனக்கொரு தாய்மடி கிடைக்குமா?’முதல் மரியாதை செய்தவனேஉனக்கென் இறுதி மரியாதை

  • *Kavya Film Company Announces ‘Production No. 12’ with Sarath Kumar on His Birthday
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
  • Chennais Amirta Signs Four International MoUs to Strengthen Global Education, Internship & Employability
  • உலகளாவிய கல்வி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வலுப்படுத்தும் வகையில் சென்னைஸ் அமிர்தா நான்கு சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme