
பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்*சென்னை, மே 28, 2026: இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டுதிரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’(KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா. ‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதைமற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார். இந்த படத்தை Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ்சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன். தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

****KPY Bala’s next film ‘Rematch’ begins with grand pooja ceremony**Tamil cinema’s first badminton-based romantic sports drama*Chennai, May 28, 2026:While cricket has inspired numerous films in Indian cinema, Badminton — one of India’s most popular and widely played sports across age groups — has rarely found representation on screen. ‘Rematch’ aims to change that by becoming Tamil cinema’s first film to explore Badminton as the backdrop for a youthful romantic sports drama.Popular entertainer and philanthropist KPY Bala, winner of the hit television show Kalakka Povadhu Yaaru (KPY) plays the lead role in the film. Bala made his debut as a hero with ‘Gandhi Kannadi’ in 2025 and has since earned appreciation for both his performances and social initiatives.After listening to several scripts for his next project, Bala chose ‘Rematch’ because of his personal connection with Badminton. A passionate Badminton player since his school days — where he secured third place in a state-level tournament — Bala instantly connected with the film’s emotional core and Badminton sports backdrop.The film introduces Dhanu Harsha as the female lead in Tamil Cinema. A theatre artiste, model, and familiar face in Kannada films, Dhanu is also an acclaimed badminton player, making her association with the project even more special.The cast also includes Ilavarasu in a pivotal role and Santhosh Prathap in an important appearance, along with Sha Ra, Sashank, Chitra Lakshmanan, Cell Murugan, and several notable actors in key roles.The technical crew features: Music by Achu Rajamani, Cinematography by Arvi, Editing by N.B. Srikanth, Art Direction by Pa. Mahendran and Costumes by Anusha. ‘Rematch’ is written and directed by debutant R. Vimal Kumar, award winning student of Screenplay Writing and Direction department of BOFTA Film Institute and a former associate of acclaimed filmmaker Radha Mohan on films such as ‘Kaatrin Mozhi’ and ‘Bommai’. Publicist: Nikil Murukan.The film is produced by Zinema Media and Entertainment Ltd’s Dinesh Raj along with producers Prakash Seshadhri and G. Ravi Kumar. Creative Entertainers & Distributors’ G Dhananjheyan is overseeing the film’s creative and line production activities.The shooting of the film commenced today with a formal pooja ceremony attended by prominent personalities from the Tamil film industry, along with the entire cast and crew. Kalaipuli S. Thanu, actress Meena, Arulpathi, directors Sasi, Radha Mohan, R. Kannan, Mahesh Rajendran, actor Kathir, Saregama Anand, Cook With Comali Joshua, and KPY Thomson participated.Planned on a start-to-finish shooting schedule, the production is expected to be completed by October 2026. Blending sports, romance, emotions, and contemporary relationships, REMATCH promises to offer audiences a fresh cinematic experience while bringing the spirit and excitement of Badminton to the big screen.