Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

Posted on May 20, 2026

கியூப்ஸ்

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்*பவுல்

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்*பவுல்ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காட்டாளன்’ வனத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது*2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார்.பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. “பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்,” என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். ‘காட்டாளன்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘கேஜிஎப்’ திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. “ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ‘காட்டாளன்’ திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்,” என படக்குழுவினர் மேலும் கூறினர். —*Cubes Entertainments ‘Kattalan’, presented by Shareef Muhammed, set for grand release across Tamil Nadu on May 28 by GS Cinema International’s Lenin**Directed by Paul George and starring Antony Varghese, Dushara Vijayan, Kabir Singh, and Sunil in key roles, ‘Kattalan’ is a gripping thriller set in the heart of a forest*Following the massive success of the 2024 blockbuster ‘Marco’, Shareef Muhammed of Cubes Entertainments is back with his next ambitious venture, ‘Kattalan’, which is slated for a grand theatrical release on May 28. Made simultaneously in Tamil and Malayalam, the film will be distributed across Tamil Nadu by Lenin of GS Cinema International.Directed by Paul George, ‘Kattalan’ stays true to its title, delving into a high-stakes struggle between smugglers within a forest. Produced on a massive scale, the film promises to be an edge-of-the-seat thriller that will keep audiences hooked from start to finish.The film features a stellar ensemble cast including Antony Varghese, Dushara Vijayan, Kabir Singh, Sunil, Siddique, Parth Tiwari, Raj Tirandasu, Harishankar Narayanan, Anson Paul, and Sandeep in pivotal roles. A unique highlight of the film is the significant contribution of two elephants, Pepsi and Ekaset. The production stated that the elephants were roped in with all necessary official permissions and under strict guidelines to ensure no animals were harmed.Music for ‘Kattalan’ has been composed by Ravi Basrur, whose powerful score in ‘KGF’ won widespread acclaim. Cinematography is handled by Rena Dive, while editing has been done by Shameer Muhammed. Though originally shot in Tamil and Malayalam, the film will also release in Telugu, Kannada, and Hindi languages.“The film possesses all the elements required for a true pan-Indian entertainer. ‘Kattalan’ will not only release across India but also in theatres worldwide. We are confident that the movie will appeal to audiences of all sections,” the team added.—

  • *Rajkumar Theatres Pvt. Ltd. moves Madras High Court over ‘Drishyam 3’ Telugu rights*
  • திரிஷ்யம் 3′ தெலுங்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்**’திரிஷ்யம் 3′ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
  • ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்
  • Dish TV Reinforces South India Focus with Language-first Entertainment and Seamless Viewing Access
  • டிஷ் டிவி இந்த புதிய சலுகையானது தென்னிந்திய குடும்பங்களுக்கு ஏதுவான விலையில் சேவைகளை வழங்குகிறது, வழங்குகிறது !!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme