Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் “பூ காய் கனி”

Posted on May 17, 2026

*அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் “பூ காய் கனி”**இண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் “பூ காய் கனி”**கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”**தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன *விசிறி* படத்தை தயாரித்தவர் திரு *A.ஜமால் சாகிப்* அவர்கள்….மீண்டும் தயாரிக்கும் படம் *பூ காய் கனி*இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை….இப்படத்தை*அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய.இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார்.இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது….மேலும் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் *பூ காய் கனி*.தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்கிறார்….*சூட்கேஸ்* படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த *ராஜேஸ்வரி வெற்றிவீரன்* அவர்கள் *பூ காய் கனி* படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார் *பூ காய் கனி* படத்தில் கதையின் நாயகனாக *KCP மிதுன் சக்கரவர்த்தி* அறிமுகமாகிறார்…இவர் *அடியே வெள்ளழகி,ஏன் என்னை காதலிச்ச* போன்ற இண்டிபெண்டண்ட் ஆல்பங்களில் நாயகனாக நடித்துள்ளார்அதுமட்டும் இன்றி நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர்…உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற *டூலெட்* படத்தின் கதை நாயகனான *சந்தோஷ் நம்பிராஜன்* மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்….குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் *மானசி* நடிகர் கொட்டாசியின் மகளான இவர் *பூ காய் கனி* படத்தில்…கதைநாயகியாக அடுத்த படிக்கட்டு எடுத்து வைக்கிறார்.*பூ காய் கனி* படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான *ராஜூ மகாலிங்கம்* ஐந்து வயதிலிருந்து *புஷ்பா ,ராயன், ஜவான்* போன்ற படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர்….*அதர்வா* நடித்த *தனல்* படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர்…*பூ காய் கனி* படத்தில் நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார்…அத்தோடு இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்…மேலும் முக்கிய நிகழ்வாக *மாயன் விருமாண்டி* போன்ற படத்திற்குப் பிறகு *கூத்துப்பட்டரையில்* இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்களை இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் *பி ஜி முத்தையா* இசை *தன்ராஜ் மாணிக்கம்* பாடல்கள்: கருமாத்தூர் *மணிமாறன்*- *வெற்றிவீரன் மகாலிங்கம்*பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியது மட்டுமின்றி *வல்லினம்* படத்திற்கு தேசிய விருது பெற்ற *V.J.சாபு ஜோசப்* அவர்கள் படத்தொகுப்பை கவனிக்கிறார்.இந்திய அளவில் கலை இயக்குனராக ஆடை வடிவமைப்பாளராக பல தேசிய விருதுகளை வாங்கிய கலை இயக்குனர் *பி கிருஷ்ணமூர்த்தி* அவர்கள் மறைந்து இருந்தாலும் இப்படத்திற்கு அவர்தான் கலை இயக்குனராக பணியாற்றவிருக்கிறார்…ஆம் அவரிடம் உதவி கல இயக்குனராக ஐந்து படங்களுக்கு வேலை செய்த இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம்…மேற்பார்வையில் கலை இயக்கத்தை செய்து அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்…பல முன்னணி நிறுவனங்களில் வியாபாரம் அனுபவம் பெற்ற…*சோனி மாறன்* அவர்கள் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்….மக்கள் தொடர்பு: *ஆனந்த்* பப்ளிசிட்டி டிசைன்ஸ்: *செல்வா*இணை தயாரிப்பு:*குரு சின்னச்சாமி*

  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
  • அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme