*நடிகர்கள்*:
சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, யோகி பாபு, மன்சூர் அலிகான்- *இயக்கம்*: ஆர்.ஜே.பாலாஜி
*இசை*: சாய் அபயங்கர்-
*தயாரிப்பு*: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
*ரிலீஸ்*: 15 மே 2026-
*நேரம்*: 2 மணி 30 நிமிடம் |
*சென்சார்*: U/A 13+

கேரளாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தன் மகளின் சிகிச்சைக்காக வருகிறார் மலையாளி இந்திரன்ஸ்.. சூளைமேடு செல்வதற்காக பக்கத்தில் இருக்கும் பயனிடம் கேட்க அவர் பெரம்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் இறங்கி சென்றார் அருகாமையில் இருக்கும் என்று சொல்கிறார்கள் அதனை தொடர்ந்து அவர் மகளுடன் அருகில் இருக்க ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ பிடிக்க செல்கிறார் அப்பொழுது அங்கு வரும் இரண்டு வாலிபர்கள் அவரை தாக்கி விட்டு சிகிச்சைக்காக தனது சேமிப்பு நகையினை 60 பவுன் நகையை பறிகொடுக்கிறார் அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் கைதியிடமிருந்து 45 பவுன் நகை கைப்பற்றியதாக கூறுகின்றனர் எனவே மலையாளி இந்திரன்ஸ் நீதிமன்றத்தை நாடுகிறார் ..ஆனாலும் பணம் பறிக்கும் வக்கீல் (பேபி கண்ணன்)ஆர் ஜே பாலாஜியிடம் மாட்டிக் கொள்கிறார்.. நீதி கிடைக்க தாமதமானதால் கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமியிடம் தன் பிரச்சனையை ஆவேசமாக முறையிடுகிறார். மலையாளி. அதே சமயம் தன் மகளையும் பறிகொடுத்து விடுகிறார் இந்திரன்ஸ்..இதனையடுத்து இந்திரன்ஸ் பக்தனின் குரல் கேட்டு (சூர்யா) கருப்பசாமி வந்தாரா.?
மலையாளி இந்திரன்ஸ் உதவினாரா கருப்பசாமி?
மக்களின் வேண்டுதலை நிறைவேற்றினார் கருப்பசாமி?
கருப்பசாமி சாதாரண மனிதராக நீதிமன்றத்தில் வென்றாரா?
காக்கும் தெய்வம் கருப்பசாமிக்கும் சாதாரண மனிதர் (வக்கீல்) பேபி கண்ணாவுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்?
காக்கும் தெய்வம் கருப்பசாமி நீதிமன்றத்திற்குள் நின்று உண்மையை பேச வைத்து நீதி பக்கம் நின்றாரா?
இது போன்ற கேள்விகளுக்கு பதிலே கருப்பு திரைப்படத்தின் திரைக்கதை.
“நீதிமன்றத்துக்கு வருவதே பெரிய தண்டனைதான்” இது போன்ற வசனங்கள் நீதித்துறையின் “அவலத்தை” உண்மையை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சூர்யா*: கருப்பசாமியாக திரையில் காண்போர் ரசிக்கும் விதமாக வேற லெவல். ஸ்கிரீன் பிரசன்ஸ், ஆக்ஷன், எமோஷன் எல்லாத்திலும் மாஸ். திரையில் 30 நிமிஷம் கழிச்சு வந்தாலும் கடைசி வரை எதிர்பார்ப்பு கருப்புசாமி தரிசனம் மிகவும் சிறப்பாக இருக்கும். அறிமுக பாடலில் நடனமும் சூப்பர்.
கருப்பு திரைப்படம் முதல் பாதி ஆக்ஷன் ,எமோஷனல், கமர்ஷியல் பேக்கேஜ். இரண்டாம் பாதி*: மாஸ் கிளைமாக்ஸ் விஷுவல் ட்ரீட் – டிக்கெட் காசுக்கு ஒர்த் கருப்பு திரைப்படம்.
பேபி கண்ணா அனுதியின் பக்கம் நின்று நீதிமன்றத்தில் நீதியை விலை கொடுத்து வாங்கும் வழக்கறிஞராக ஆர் ஜே பாலாஜி வில்லனாக மிரட்டியுள்ளார்.
*இசை + டெக்னிக்கல்*: சாய் அபயங்கர் BGM படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகுது.
ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, ‘வீரப்பா’ பாடல் ஹைலைட்.
