Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

Posted on May 7, 2026

*டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!*மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது ‘அழியாத கோலங்கள் 2’ திரைப்படம் அதன் முதிர்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான ‘ட்ரீம் கேர்ள்’ காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது ‘சைக்கிள் கேப்’ இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார். படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். *தொழில்நுட்பக்குழு விவரம்:*இசையமைப்பாளர்: சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்), பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கௌஷிக் ஸ்ரீதரன், நிர்வாக தயாரிப்பாளர்: சுஜா சூர்யா நிலா,ஒளிப்பதிவு: சாலமன் போஸ் டி.எஸ்., படத்தொகுப்பு: சரவண எட்டயஞானம், வசனம்: ஹேமந்த் செல்வராஜ்

  • வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்
  • *100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!*
  • Aura 10/10 Crosses 100 Million Views, Emerges as a Global Mega Hit!
  • *AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!*
  • *Chennais Amirta International Institute of Hotel Management Students honour Hon’ble Chief Minister Shri. C. Joseph Vijay
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme