விக்னேஷ் ராஜா இயக்கத்தில். தனுஷ் நடிப்பில் இன்றைய சமுதாயத்திற்கு (விவசாயிகளுக்கு) விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் கர திரைக்கதை அமைந்துள்ளது.கர திரைப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ், ப்ரித்வி என திரை பட்டாளமே நடித்துள்ளனர்.கர திரைப்படம் இன்று வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பேர் ஆதார்வை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கர திரைப்படத்தின் நாயகன் கர சாமி சுயமாக தொழில் தொடங்க தனது அப்பா கே எஸ் ரவிக்குமாரிடம் பணம் கேட்க அவர் கொடுக்க மறுக்கிறார் அதனைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு செல்கிறார் நாயகன் கர சாமி (தனுஷ்) அப்பொழுது பணத்தை இழக்க நேர்கிறது அதனைத் தொடர்ந்து திருடன் முடிவு செய்கிறார்.

கர திரைப்படம் தொடக்கத்திலேயே நாயகன் கர சாமிதனுஷ், ப்ரித்வி இரண்டு பேருமே MLA வீட்டை திருட செல்கின்றனர். அதில் நாயகன் கர சாமி (தனுஷ் ) திருடச் சென்ற இடத்தில் நிற்பவர்கள் நாயகனை பிடித்து போலீசில் ஒப்படைகிறார்கள், ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ் கர சாமி (தனுஷ் ) மீது நிறைய பொய் கேஸ்களை போட்டு தனக்கு பாராட்டுக்களும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார் போலீஸ் ஆய்வாளர் சுராஜ்.இதனை அறிந்த நாயகன் கர சாமி அங்கிருந்து தப்பித்து சொல்கிறார் அதன்

பிறகு ஆந்திரா ரேணிகுண்டா பகுதியில் உள்ள உணவகத்தில் சர்வராக வேலை செய்கிறார் அப்பொழுது நாயகியை சந்திக்கும் நாயகன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் அப்பொழுது நாயகன் தனக்கென சொந்தமாக உணவகம் அமைக்க வேண்டும் என்று பேங்கில் நிதி உதவி கேட்க வங்கியின் இயக்குனர் சொத்து மதிப்பின் பேரில் கடன் கொடுக்க முடியும் என்று கூற தனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும் அதற்கான ஆவணத்தை கொண்டு வருவதற்கு கூறி என் சொந்த ஊருக்கு செல்கிறார் நாயகன் கர சாமி (தனுஷ்)கர
சாமி தனுஷ் தனது அப்பா கே எஸ் ரவிக்குமாரிடம் சொத்தை விற்று தனக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறும் கேட்கிறார் அப்பொழுது கேஎஸ் ரவிக்குமார் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து டாக்டர் வாங்கி உள்ளதாக கூறுகிறார் புதிய மழை இல்லாமல் விவசாயம் வைத்து போவதால் டிராக்டர் கடனை கட்ட முடியாமல் வங்கி நிலத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளது நாயகன் கர சாமி கண்டுபிடித்து வங்கி இயக்குனரை நேரில் சந்தித்து பேசுகிறார்.கே எஸ் ரவிக்குமார் தனது மகன் கர சாமி தன்னுடன் வாழ வந்திருப்பதாக நினைக்கிறார் ஆனால் நிலத்தை விற்று பணம் கேட்க மனம் உடைந்து படுக்கையிலேயே இறந்து போகிறார் அவரை இறுதி சடங்கு செய்ய தனது முன்னோர்களின் அருகில் தனது நிலத்தில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்கிறார் அப்பொழுது வங்கியில் உள்ள அதிகாரிகள் நிலத்தை ஜப்தி செய்ய உள்ளதாகவும் தற்போது இந்த நிலம் வங்கிக்கு சொந்தமானது என்று கர சாமி அப்பாவின் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் தடுக்கின்றனர் .நாயகன் கர சாமி (தனுஷ்) தன் அப்பாவின் ஆசைப்படி அவர் சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்ய பணம் ஏற்பாடு செய்ய பல்வேறு இடங்களில் பணத்தைக் கேட்க தர மறுக்கின்றனர் அதனைத் தொடர்ந்து கருணாஸ் மற்றும் ப்ரித்வி மற்றும் நாயகன் கர சாமி ஆகியோர் இணைந்து வங்கியில் திருட செல்கின்றனர் தோல்வியடைய பகலிலேயே வங்கியில் சென்று வங்கியில் உள்ள மூன்று லட்சம் கடனுக்கான காசை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கே இருந்து தப்பித்துக் சொல்கின்றனர்.
விவசாயிகளின் இன்றைய அவல நிலையினை திரைக்கதையாக அமைத்து திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது இந்த கரா சாமி திரைக்கதை.
கர சாமி தனுஷ் அவரது அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்றினார்.
வங்கியில் கடன் வாங்கும் விவசாயிகளின் அவல நிலையை திரையில் காண்போரை சிந்திக்க வைத்துள்ளது கர திரைப்படம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக வாழ்க்கையை மாற்றிக் கொண்ட நாயகன் கர சாமி (தனுஷ்) எவ்வாறு விவசாய மக்களுக்கு உதவுகிறார்?
1990 காலகட்டத்தில் படிப்பறிவு இல்லாத மக்களை வங்கிகள் எப்படி கடன் கொடுத்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை விரைவில் சிந்திக்க வைத்துள்ளது?கர சாமி திரைக்கதையின் மூலம் சமுதாயத்தில் நடக்கும் அவல நிலையினை திரையில் காண்போரை சிந்திக்கவும் வசிக்கவும் வைத்துள்ளது திரைப்படம்