Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*

Posted on April 12, 2026
  • *இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*

‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படம், தொகுப்பு நூல், அவர்களது படைப்பாக்கம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையோடு ‘வேர்ச்சொல் விருது’ அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டிற்கான (2026) ‘வேர்ச்சொல் விருது’ கவிஞர், நாடகக் கலைஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது .
சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீன தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவர் என்.டி.ராஜ்குமார். அவரது கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் கலைத்துக் காட்டுவதோடு, பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தன் கவிதைக்குள் விரித்துக் காட்டின. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ‘வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை’ இரண்டு நாட்கள் நிகழ்வாக வரும் ஏப்ரல் 18, 19 தேதிகளில் சென்னை முத்தமிழ்ப் பேரவை, டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. கூடுகையின் இரண்டாம் நாள் (19.04.2026) மாலை நான்கு மணியளவில், 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை, கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது

  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
  • Two Years After Stem Cell Transplant, Survivor of Rare Blood Disease Meets His Donor
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme