கோயம்புத்தூரில் நடக்கும் திரைக்கதையில் 2003ஆம் ஆண்டில் நடக்கும் கதையில் விகாஸ் நாராயண் (ஷர்வானந்த்) Motokart நடத்தி வருகிறார். காதல் மனைவி அனன்யா (மாளவிகா நாயர்), மகன் இஷான் என தனது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக மேற்கொண்டு வருகிறார் நாயகன்.
நாயகன் விகாஸ் நாராயண் மகன் இஷான் பள்ளியில் பயிலும் மாணவன் தனது அப்பாவைப் பற்றி தவறாக பேச அவனை அடித்து விடுகிறான். இது சில வாரம் கழித்து மகனின் வகுப்பு தோழி விகாஸிற்கு உண்மையை கூற, மகனை விசாரித்து பின் ஒருவரை அடிப்பதை விட இன்னொரு முறை அப்படி பேச நாம் இடம் தரக் கூடாது என்று தனது மகனுக்கு அறிவுரை கூறுகிறார் நாயகன்.
விகாஸ் நாராயண் சிறுவயதிலேயே தனது அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பில் வளரும் நாயகன் விகாஸ் நாராயண் அப்பா சிறந்த மோட்டோகிராஸ் வீரரான சுனில் நாராயணை (ராஜசேகர்) மையமாகக் கொண்டுள்ளது. அவர் தனது மகன் விகாஸ் நாராயணை (ஷர்வானந்த்) சிறுவயதில் தன் அப்பாவிடம் தானும் சிறந்த வீரராக ஆசைப்படுவதாக கூற தனது மகனின் ஆசையை நிறைவேற்ற பயிற்சி கொடுக்கிறார் நாயகனின் அப்பா.
நாயகனின் விகாஸ் நாராயண் பைக் ஓட்டும் துணிச்சலை பார்த்து நாயகி காதல் வெளிப்படுத்த காதலில் விழுகிறார் நாயகன் அப்பொழுது இருவருக்கும் குழந்தை உருவாக அதே சமயம் தனது அப்பா தனது மகனின் ஆசையை உலகளவிற்கு கொண்டு செல்ல ING நிர்வாணத்துடன் இணைந்து உலகளவியர் பைக் பந்தயத்தில் கலந்து கொள்ள முடிவு இன் செய்கிறார் அவரது அப்பா அப்போ இது முதல் சுற்றி முடித்துவிட்டு தனக்கு குழந்தை பிறப்பதாகவும் அதனை பார்ப்பதற்கு செல்லும் நாயகன் தனது மனைவியின் வேண்டுகோளுக்கு நாங்க போட்டியில் கலந்து கொள்ள மறுக்கிறார் ஆகையால் ING நிறுவனம் நாயகன் அப்பா மீது மோசடி வழக்கு பதிவு செய்து நாயகனின் அப்பா பைக் ரேஸில் கலந்து கொள்ளவும் பயிற்சி அளிக்கவும் தகுதியற்றவர் என்று முடிவு செய்கிறது.
பைக் ரேஸில் கலந்து கொள்ள பண உதவி செய்த ING நிறுவனத்திற்கு மோசடி செய்துவிட்டதாக சுனில் நாராயண் (டாக்டர். ராஜசேகர்) வெளியேற்றப்படுகிறார். அதனை அறியும் விகாஸ் தன் அப்பாவின் மீது சுமத்தப்பட்ட மோசடி புகாரை சரி செய்ய நாயகன் விகாஸ் நாராயணன் மீண்டும் Motocross ரேஸிற்கு செல்கிறார் இறுதியில் நாயகன் வெற்றி பெற்று தனது அப்பாவின் கனவை நிறைவேற்றினார் என்பது வைக்கத் திரைப்படத்தின் திரைக்கதை.
குடும்பத்திற்காக நாயகன் தனது சிறுவயது கனவை நிறைவேற்றினார்?
தன் மகனுக்காக எதை செய்யும் சிறந்த பைக் ரேசர் சுனில் நாராயணன் கனவு நிறைவேறியதா?
உயிரை பணயம் வைத்து விளையாடும் பைக் ரேஸ் விளையாட்டில் சிறையில் ரசிக்க வைத்துள்ளதா?
இது போன்ற கேள்விக்கு பதில் பைக்கர் திரைப்படத்தின் திரைக்கதை.
“நமக்கு பின்னாடி வர்றவங்கள பாத்து பயங்கறதுதான் தோல்வி காரணம்”
அதே பயம் மத்தவங்களுக்கு ஏற்படுத்தினால் வெற்றிக்கு ஆயுதம்”
“போட்டியில் நீ முன்னாடி வரல எல்லோரும் உன் பின்னாடி வந்தாங்க; ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ” இது போன்ற உற்சாகமான நம்பிக்கையூட்டும் வசனங்கள் திரைக்கதையோடு ரசிக்க வைத்துள்ளது.
பைக்கர் திரைப்படம் திரையில் ரசிக்க பின்னணி இசை திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.
J.யுவ்ராஜின் ஒளிப்பதிவு திரையில் ரசிக்க வைத்துள்ளது . பைக்கர் திரைப்படத்திற்கு மெருகூட்டும் வகையில் அனில் குமாரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பு