Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

Posted on April 3, 2026

மதிப்பீடு : 4.8/5
நடிப்பு – 1.5
இசை  – 2
ஒளிப்பதிவு 1.3

பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளார் பரத், காதல் திரைப்படம் மூலம் தனது நடிப்பை திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார் நடிகர் பரத், வெயில், பழனி, எம்டன் மகன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை திரையில் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற  நடிகர் பரத். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ‘காளிதாஸ்’ என்ற படத்தில் நடித்து பெரிய வெற்றியை பெற்று மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று காளிதாஸ் 2வில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து பரத் வெள்ளி திரையில் தனி முத்திரை பதித்து வருகிறார்  , காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டும் வகையில் உள்ளது.

ஸ்ரீ செந்தில் இயக்கிருந்த மீண்டும் ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. ஸ்கை பிக்சர்ஸ் தயாரித்துள்ள காளிதாஸ் 2 திரைப்படத்தின் நடிகர்கள்.

நடிகர்கள் :  பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர்
இசை : சாம்.சி.எஸ்
இயக்கம் : ஸ்ரீ செந்தில்மக்கள்
தொடர்பு : யுவராஜ்

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

காளிதாஸ் 2 திரைப்படம் தொடக்கத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார் தன்னை ஒரு சிலர் கொல்ல முயற்சிப்பதாகவும் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று தனது இருக்கும் இருப்பிடத்தை லொகேஷன் ஷேர் செய்து உதவி கேட்கிறார் அந்தப் பகுதியின் ஆய்வாளராக பணிபுரியும் காளிதாஸ் (பரத்) பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார் அப்பொழுது அந்த இடத்தை அடையும் பொழுது அவரது அப்பா அடியாட்களுடன் அந்தப் பெண்ணை தனது காதலருடன் தோன்றுகிறார் மற்றும் அவர் தந்தை அதே இடத்தில் அமர்ந்திருக்க இது ஆணவக் கொலை என ஆய்வாளர் காளிதாஸ் மேலதிகாரிக்கு தகவல் கொடுக்கிறார்.
முதல் கொலை நடந்த அன்று இரவு புது வருட பிறப்பு என்பதால் சென்னை பகுதியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் புது வருட கொண்டாட்டத்திற்காக அனைவரும் உற்சாகமாக வரவேற்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதே
வேலையில்   அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள்  4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது.
குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைவரும் சேர்ந்து தேடுகின்றனர் குழந்தை கிடைக்காமல் போக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க ஆய்வாளர் காளிதாஸ் அவர் குழுவுடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து தேடுதல் பணியை தொடர்கின்றனர் அவர்கள் தேடியும் கிடைக்காததால் அடுக்குமாடி குடி இருப்பில் இருக்கும் பொறுப்பாளர்கள் கோபமடைந்து காவல்துறை உயர் அதிகாரிக்கு திறமையான அதிகாரி வேண்டும் என்று கோரிக்கை வைக்க  காவல்துறை உயர் அதிகாரியான  காவல் கண்காணிப்பாளர் (SP) பவானி ஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்பு வருகிறார்கள் மற்றும் அவரது தலைமையில் விசாரணை நடைபெறுகிறது இதில் பேச்சுலர்கள் வசிப்பவர்கள் கணக்கெடுக்க உத்தரவிட்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் அப்பொழுது அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி ஏற்கனவே சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிறை சென்று அங்க கிஷோர் சந்திக்கிறார் தான் குற்றம் அற்றவன் என்றும் அவரிடம் கூறுகிறார் சிறையில் இருக்கும் கிஷோர் அவருக்கு உதவி செய்ய பிரபல வழக்கறிஞராக பிரகாஷ் ராஜ்  அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறார் என்பது தெரிய வருகிறது.  அவரை கைது செய்து விசாரிக்கையில் காணாமல் போன குழந்தையின் சடலம்  கிடைக்கிறது  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர் அதனைத் தொடர்ந்து அதே அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மற்றொரு பெண் மர்மமான முறையில் இறந்து உடலை மீட்கின்றனர் தொடர் கொலை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு பொறுப்பாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் காவல்துறை மீது கோபம் அடைய ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பவானி ஸ்ரீ இந்த வழக்கிலிருந்து நீக்கப்படுகிறார் இதனை தொடர்ந்து கொலைக்கான தடயங்கள் கிடைக்காமல் திணறும் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த கொலை  உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை காளிதாஸ் படத்தின் நொடிக்கு நொடி விறுவிறுப்பையும் திரையில் காண்போரை கதையோடு இணைத்து கொண்டு செல்லும் மாயாஜாலத்தை திரைக்கதை செய்துள்ளது மற்றும் இசை மற்றும் நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை குற்றவாளி யார் என்பதை திரைக்கதை முடியும் வரை கதையோடு திரைப்படத்தை காண்பவரே பயணிக்க வைக்கும் திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
தொடர் கொலையின் காரணமாக ஆய்வாளர் காளிதாஸ் கொள்ளைக்கான காரணத்தை கண்டுபிடித்தார்?
ஆய்வாளர் காளிதாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் மர்மத்தை தடுத்து நிறுத்தினாரா?
காவல் கண்காணிப்பாளர் (SP)பவானி ஸ்ரீ தலைமையில் குற்றவாளிகளை சிறை பிடித்தாரா?
அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் சங்கீதா உண்மையான கொலையாளியை முன்னிறுத்தினாரா?
இளைஞர் அஜய் கார்த்தி ஒரு சிலரை 11 தீர்க்கிறார் அது என்?

இது போன்ற கேள்விக்கு நொடிக்கு நொடி அடுத்து திரையில் நடக்கும் நிகழ்வுகளை திரைக்கதையோடு  காண்பவரே பயணிக்க வைத்தது காளிதாசன் 2 மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

பூவே உனக்காக திரைப்படத்தின் நாயகி சங்கீதா  மீண்டும் பிறையில் நடிக்க வந்து யாரும் யூகிக்க முடியாத முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரையில் அனைவரது கவனத்தையும் இருக்கிறார் மற்றும் அபர்ணதி, அனந்த் நாக், வழக்கறிஞர்  பிரகாஷ் ராஜ், கிஷோர் , சிறுமிகள் என படத்தில் நடித்த அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காளிதாஸ் 2 திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது மற்றும்  சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு நடிகர்களின் பார்வையோடு ஒன்றி திரையில் காண்போரை திரைக்குள் கொண்டு சென்று கதையோடு பயணிக்க வைத்துள்ளது மிக சிறப்பு.

இயக்குநர்  ஸ்ரீ செந்தில் தொடர்  கொலை சம்பவத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார்   இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் ?  கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை அமைத்து திரையில் காண்போரை திரைக்கதையோடு ஒன்று ரசிக்க வைத்து மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது திரைப்படம் .

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme