Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ மியூசிக் வீடியோ ஆல்பம்

Posted on March 21, 2026

‘முதல் முதலாய்’ மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் அறிமுகமாகும் ‘நடன புயல்’ பிரபுதேவாவின் வாரிசு ரிஷி தேவா

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் – மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய , சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான காட்சி மொழி… ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைலான தோற்றம்… நடனம் ..அனைத்தும் இளமைத் துள்ளலுடன் இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரிஷி தேவா – ஜி. வி பிரகாஷ் குமார் – ரவிச்சந்திரன் – கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘முதல் முதலாய்’ மியூசிக்கல் வீடியோ ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நடிகர் பிரபுதேவா நடனமாடி பிரபலமான ‘சிக்கு புக்கு ரயிலே.. பாடலை சிறுவயதில் ஜி. வி பிரகாஷ் குமார் பாடினார் என்பதும் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய் ‘ மியூசிக்கல் வீடியோ ஆல்ப பாடலையும் ஜி. வி பிரகாஷ் குமார் தான் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘முதல் முதலாய்’ ஆல்பம் பாடலை முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Link : https://www.youtube.com/watch?v=Ty6CwDdCeKY

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme