
நடிப்பு :
ரச்சிதா மகாலட்சுமி, எம்.எஸ்.மூர்த்தி, தேனப்பன், கே.ஆர்.விஜயா, சபரி, ரோஹிந்த், ஸ்வேதா
தயாரிப்பு : மித்ரா பிக்சர்ஸ்
இயக்கம் : எம்.எஸ்.மூர்த்தி
ஒளிப்பதிவு : சேவிலோ ராஜா
இசை : மூர்த்தி
வெளியான தேதி : மார்ச் 6, 2026
நேரம் : 2 மணிநேரம் 08 நிமிடம்
மக்கள் தொடர்பாளர்: புவன்
ரேட்டிங் : 7.9 / 10
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 99 வீடுகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் 66வது எண் வீட்டை வாங்கி கணவருடன் வசிக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. எதிரே உள்ள 99வது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு இடையே நல்ல உறவு ஏற்படுகிறது. ஸ்வேதாவை அவர் கணவர் கொலை செய்ய முயற்சிப்பதாக உணரும் ரச்சிதா இது பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்ல, 99வது வீட்டில் யாருமே வசிக்கவில்லை இது பற்றி பிளாட் ஓனரான மூர்த்தியிடம் இது பற்றி விசாரிக்க, அந்த பிளாட்டில் தாய் இல்லாத தன் பாச மகள் வசித்தார் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தனது மகளின் கணவரை நான் கொல்ல நினைக்கிறேன். என்னையும் தனது மகள் ஆவி ஆகி தடுக்கிறாள். உன்னிடம் அவள் ஏன் பேசுகிறார் என எனக்கு தெரியவில்லை என அவர் கூற,
ஸ்வேதா யாரால் எதனால் கொல்லப்பட்டார் ?
ரச்சிதாவை அவரது கணவர் கொலை செய்ய திட்டமிடுவது நிறைவேறியதா?
ரசித்தவை ஏன் ஸ்வேதா சந்திக்க விரும்புகிறார்?
அடுக்குமாடி குடியிருப்பின் சங்கத் தலைவர் எம் எஸ் மூர்த்தியை இரவு நேரத்தில் ஆந்தை துரத்துவது ஏன்?
இது போன்ற கேள்விக்கு பதில் 99/66 படக்கதை.
எம்.எஸ்.மூர்த்தி இயக்கி, நடித்து, இசையமைத்து படத்தை தயாரித்து இருக்கிறார்.
ரச்சிதா. அப்பாவி மனைவியாக வருபவர், உடம்பில் ஆவி புகுந்தபிறகு தப்பானவர்களை தவறு செய்பவர்களை அடித்து தும்சம் செய்கிறார் .இன்னொரு நாயகியாக வரும் ஸ்வேதாவுக்கு நடிப்பு திரையில் ரசிக்கும் படி உள்ளது.
ரோகிந்துக்கும் சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி இவர்கள் காமெடியும் நடிப்பும் திரையில் ரசிக்கும் படியுள்ளது.