Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!

Posted on March 8, 2026

பல்வேறு துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 50 பெண்மணிகளையும் சமூகத்தில் அவர்கள் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் தாக்கத்தையும் பாராட்டும் வகையில் ZERRO நிறுவனம் சமீபத்தில் ’ZERRO Women Honours 2026’ என்ற விருது விழாவை நடத்தியது. வணிகம், கல்வி, சமூக சேவை, விளையாட்டு, பத்திரிகை துறை, கலை, சுகாதாரம், தொழில் முனைவோர், சமூக தலைமை போன்ற பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியால் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து முன்னோடியாக திகழும் பெண்களை கொண்டாடுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம்.

இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ரவி மற்றும் டாடின் எஸ். காவேரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ZERRO.online நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஐஎல்ஏ ஆர்டிசனல் ஸ்கின்கேர் நிறுவனத்தின் நிறுவனரும், நடிகையுமான நமீதா பகிர்ந்து கொண்டதாவது, “இன்றைக்கு நான் ஸ்பெஷலாக பேச வேண்டும் என தயாராகவில்லை. இங்கே வந்துள்ளவர்கள் அனைவரும் தங்கள் சிந்தனைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ZERRO Women Honours என்ற இந்த விருது நிகழ்வை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது ஒரு கேள்வியிலிருந்துதான். நான் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டேன். அங்கு ‘நாம் ஏன் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்று சொல்கிறோம்? ‘ஜெண்டில்மேன் அண்ட் லேடிஸ்’ என்று சொல்லலாமே?’ என்று என்னிடம் கேள்வி கேட்டனர்.

அப்போது நான் சொன்ன பதிலும், இன்றும் என்னுடைய நம்பிக்கையும் அதேதான்! கடவுளின் ஆகச்சிறந்த படைப்பு பெண்கள்தான். பெண்களிடம் அளவில்லாத சக்தி, கருணை மற்றும் உறுதி இருக்கிறது. அவர்கள் மனதில் நினைக்கும் எதையும் சாதிக்க முடியும். பெண்கள் வெற்றி பெறும் போது, அந்த வெற்றிக்கான முழு அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இந்த விருதுகள் அவர்களை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டவை. மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவித்து, முன்னேறவும் மற்றவர்களை வழிநடத்தவும், சமூகத்தில் பெண்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் எனவும் நிரூபிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்து கொண்டதாவது, “மற்றவர்களின் சாதனைகளை கெளரவிக்கும் பொருட்டு பல நிகழ்ச்சிகளில் நான் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்று எனக்கான அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நான் எழுதிய ஒரு ‘நறுக்கு கவிதை’எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அதில் நான் ‘Be Positive, because my blood group is B Positive’ என்று எழுதியிருந்தேன். எளிமையான வரிகளாக இருந்தாலும் அந்த வரிகளின் நம்பிக்கையும் தைரியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுபோல, பெண்களும் தங்களுக்கு வரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் துணிச்சலை கைவிடக்கூடாது. ஒரு பெண் தன் முன்னால் வைக்கப்பட்ட தடைகளை கடந்து செல்லுவதற்குப் பதிலாக, அவற்றை உடைத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். பெண்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் மாறும்போது, உலகமே அவர்களின் சக்தி மற்றும் உறுதியின் முன் தலைகுனியும்” என்றார்.

தங்களது துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பெண்களை அடையாளம் கண்டு, கெளரவிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் ZERRO Women Honours விருதுகள். பல்வேறு துறைகளை சார்ந்த சாதனை பெண்களை கௌரவிப்பதன் மூலம் தலைமைத்துவம், புதுமை, உறுதி மற்றும் சமூக தாக்கம் ஆகியவற்றையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் திறமை மற்றும் மேன்மையை உலகிற்கு எடுத்துச் செல்லும் ZERRO நிறுவனத்தின் பார்வையையும் இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. தரமான தயாரிப்புகள், தொழில்முனைவோர் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் நபர்களை முன்னிறுத்துவதன் மூலம் இந்திய திறமையின் மீது நம்பிக்கையை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இந்திய உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் பிராண்டுகளின் நம்பகமான தயாரிப்புகளை நுகர்வோருடன் இணைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மார்க்கெட் தளம்தான் ZERRO. தரம், நம்பகத்தன்மை மற்றும் பொறுப்பான வணிகத்தை முன்னிறுத்தும் இந்த தளம், உள்ளூர் தொழில் முனைவோர்களை ஆதரிப்பதுடன், zerro.online மற்றும் ZERRO App மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. ZERRO நிறுவனத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எம். வீரா, நடிகை நமீதா மற்றும் தொழில்முனைவோர் B.மஞ்சுநாத் ஆகியோர் நிறுவியுள்ளனர்.

  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
  • இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme