Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்

Posted on February 26, 2026

செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் – வசீகர குரல் – இசை கோர்வை – என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் – ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- ‘மென்டல் மனதில்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

LINK : https://www.youtube.com/watch?v=qPaPA3AQ4JI

  • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme