Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

உயிர் உள்ளவரை உஷா

Posted on February 17, 2026

T.ராஜேந்தர் நான்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து ஆறாவதாக  இயக்கி, தயாரித்த படம் தான் உயிர் உள்ளவரை உஷா. T R  சொந்தமாகத் தயாரித்த  முதல் படம். உஷாவை திருமணம் செய்த பின் வெளியாகிய முதல் காதல் திரைப்படம் அதனால் தான் 43 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் டி ஆர் படங்களில் முதல் இடத்தை இது பிடிக்கிறது.

உயிர் உள்ளவரை உஷா திரைப்படத்தில் நாயகன் நாயகி ஒரே காலேஜில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.  நாயகன் அத்தை வீட்டில் வளர்கிறான். நாயகி அக்காவின் பராமரிப்பில் வளர்கிறாள், நாயகிக்கு ஒரு அண்ணனும் உண்டு மோசமான (காதலை எதிர்க்கும்) வில்லன் செயின் ஜெயபால் .

காலேஜில் நாயகன், நாயகியை அடிக்கடி கிண்டல் பண்ணுவதும், கேலி பேசுவதுமாக இருக்கிறான்.
ஆனால் போக முடியும் நாயகி நாயகன் மீது கல்லூரியின் முதல்வரிடம் தன்னை நாயகன் காதலிக்க சொல்லி தொந்தரவு செய்வதாகவும் காதல் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் புகார் அளிக்கிறார்
இதனால் நாயகனுக்கு காலேஜில் சக மாணவர்கள் மத்தியில் அவர் பெயர் ஏற்படுகிறது.

சிறிது காலம் கழித்து கல்லூரியில் ஆண்டு விழாவில் நாடகத்தில் நாயகனுக்கு துச்சாதனன் வேடம், நாயகிக்குப் பாஞ்சாலி வேடம். பொய்யான குற்றச்சாட்டு வைத்த நாயகியைப் பழி வாங்க நாயகன், நாயகியை நாடக அரங்கில் அனைவரின் முன்னிலையில் மேடையில் நாயகன்  நாயகிக்கு முத்தம் இட்டு விடுகிறான்.

இதனை கேள்விப்பட்ட நாயகியின் அண்ணன் “செயின் ஜெயபால் “நாயகனை அடி வெளுத்து விடுகிறான். காயம்பட்ட நாயகனைப் பார்த்து நாயகிக்குக் காதல் வருகிறது.

நாயகியின் அண்ணன் தான் இவர்களது காதலுக்கும், திரைக்கதைக்கும் வில்லன். TR “செயின் ஜெயபால்”இவர்களது காதல் நிறைவேறியதா, இல்லையா? என்பதுதான் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் திரைக்கதை.

  • _*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinem
  • பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது
  • இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme