Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Posted on February 15, 2026

’4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த நிலையில், லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் தற்போது அதே நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதன்படி, லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘4 இடியட்ஸ்’.

அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகர் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார். நாயகியாக பிரக்யா நயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின், இந்திரன், திடியன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சுபாஷ் முனிரத்னம் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கலைகுமார், திவ்யபரத் ரவி எழுதியிருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, எம்.டி.பிரபாகரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். எஸ்.என்.பாசில் படத்தொகுப்பு செய்கிறார். டாவின்ஸி சரவணன் வசனம் எழுதியிருக்கிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில், சென்னை கமலா திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். மேலும், லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நிறுவனம் இன்னும் தொடர்ந்து பல வெற்றி படங்களை தயாரிக்கும், என்று தெரிவித்தனர்.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme