Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வித் லவ் திரை விமர்சனம்

Posted on February 6, 2026

ஜியான் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்திருக்கும் வித் லவ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மதன்.

இதில் அபிஷன் ஜீவிந்த் – சத்யசீலன் ( சத்யா ), அனஸ்வரா ராஜன் – மோனிஷா, தேனி முருகன் – சத்யாவின் அப்பா, “கலைமாமணி” சரவணன் – சாமிநாதன், ஹரிஷ் குமார் – தினேஷ், காவ்யா அனில் – அனிஷா, சச்சின் நாச்சியப்பன் – பாலாஜி, சாச்சனா – சந்தியா, ஆர்.ஜே.ஆனந்தி – சத்யாவின் அக்கா, டிம்பிள் கண்ணா – விநோதினி, சித்தார்த் – ஜாஃபர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவினர்கள்:- இசை – ஷான் ரோல்டன்,  ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டிங் – சுரேஷ் குமார், கலை இயக்கம் – ராஜ் கமல், இணை தயாரிப்பாளர் – விஜய் எம்.பி, நிர்வாக தயாரிப்பாளர் – ஏ. பாலமுருகன், பாடல் வரிகள் – மோகன் ராஜன், உமா தேவி, மதன், நடன அமைப்பு – சந்தோஷ், சண்டை பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ் (கார்த்திக்), உடை வடிவமைப்பு – பிரியா ரவி, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – சரத் ஜே. சாமுவேல், ஸ்டில்ஸ் – மணியன், பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – ஜோஸ் கிறிஸ்டோ,
மக்கள் தொடர்பு  – யுவராஜ்

அனைத்து உயிர்களுக்கு உன்னதமான  காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள  திரை காவியம் வித் லவ் .

பள்ளிப் பருவத்தில் பழத்தின் காரணமாக சொல்லாமல் போன காதல் பருவ முதிர்வின்போது சொல்லத் துடிக்கும் தூய்மையான காதல் ஆசை நிறைவேறியதா என்பது வித் லவ் காதல் காவியமாக திரையில் ஜொலிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் தொடங்கும் முதல் காதல் மானிடரை உயிர்த்துடிப்பு அடங்கும் வரை இதயத்திற்குள் அமைதியாக துடித்து கொண்டிருக்கும் அந்தக் காதலை திரைக்கதையாக உருவாக்கி திரையில் காண்போரை அனைவரையும் ரசிக்க வைத்த திரை காவியமாக இந்த வித் லவ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இளைஞர்கள் முதல் முதியவர் வரை  அனைத்து தரப்பினர் இதயத்திலும் ஜொலிக்கிறது வித் லவ் காதல் காவியம்.


நாயகன் தந்தை உணவகம் நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டு தனது மனைவி மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார், நாயகன் திருமண வயது கூடிக்கொண்டே போவதால் அக்கா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நாயகன் சத்யா (அபிஷன் ஜீவிந்த்).  தன் அக்கா ஆனந்தி (ஆர்.ஜே ஆனந்தி) நாயகன் அக்கா சந்திக்கும் பெண் மோனிஷா (அனஸ்வரா ராஜன்). நாயகன், நயகி இருவரும்பேசத் தொடங்கும்போது, அவர்கள் இருவருக்குமே ஒரு பொதுவான ஏக்கம் இருப்பதை உணர்கிறார்கள் அதுதான் பள்ளிப் பருவ ‘முதல் காதல்’.  திருச்சியில் உள்ள எஸ்டிஏ பள்ளியில் சத்யா சீனியராகவும், மோனிஷா ஜுனியராகவும் படித்தவர்கள் என்பதையறிந்து மகிழ்கிறார்கள். அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது, சத்யா அனிஷாவுடன் இருந்த ஒரு தலை காதல் பற்றியும், மோனிஷா வகுப்பில் முதல் மாணவானாக பாலாஜியுடன் இருந்த காதலைப்பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். நாயகன் முதல் காதலி அனிஷா திருமணம் செய்து கர்ப்பிணியாகவும் ஒரு ஆண் குழந்தைக்கு தாய் என்பதையறிந்து கொள்கிறார் நாயகன் சத்ய தனது முதல் காதலை அப்போது நாயகன் சொல்ல தனது முதல் காதலி சிரிக்கிறார் நான் இப்போது நான் வேறொருவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைக்கு தாய் என்று கிண்டல் செய்கிறார் நாயகனை அதே சமயம் நாயகியின் முதல் காதலன் பாலாஜிப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவிப்பதாக மோனிஷா நாயகனிடம் கூறுகிறார். நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளவும், இருவரும் தங்கள் பழைய காதலைத் தேடியும் திருச்சியில் இருந்து தனது முதல் காதலை தேடி விமானம் மூலம் நாயகன் உதவி உடன் சென்னை வருகின்றனர் இருவரும் இந்தப் பயணத்தில் நாயகன் நாயகி இருவரும் சந்திக்கும் (முதல் காதல்) அவர்கள் சந்திக்கும் போது இருக்கும் அவர்கள் மண நிலை என்ன? பள்ளிப்பருவ  காதலர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வு என்ன? வித் லவ் திரைப்படத்தின் நாயகன் சத்யா யாரைத் திருமணம் செய்துகொண்டார்? நாயகி மோனிஷாவின் உதவியால் சத்யா தன் தந்தையின் உணர்வை புரிந்து கொண்டாரா?
இது போன்ற கேள்விக்கு பதில்  ‘வித் லவ்’ திரைப்படத்தில் திரைக்கதை.

நாயகன் அக்காவாக ஆர்.ஜே ஆனந்தி திரையில் இயல்பாக நடித்த ரசிக்க வைத்துள்ளார் தம்பியின் காதலுக்குத் துணை நிற்கும் காட்சிகளில் திரையில் ரசிக்க வைத்துள்ளார்.

இவர்களுடன் தேனி முருகன் – சத்யாவின் அப்பா, “கலைமாமணி” சரவணன் – சாமிநாதன், ஹரிஷ் குமார் – தினேஷ், சச்சின் நாச்சியப்பன் – பாலாஜி, சாச்சனா – சந்தியா, டிம்பிள் கண்ணா – விநோதினி, சித்தார்த் – ஜாஃபர்  மற்றும் நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்கள் அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் திரைப்படத்திற்கு தனது இசையின் மூலம் பலம் சேர்த்துள்ளார் ஷான் ரோல்டனின் திரைக்கதைக்கு பின்னணி இசை காதலின் ஆழத்தை”திரையில் ரசிக்க வைத்துள்ளது” உணர்த்துகிறது. குறிப்பாக 90-களின் ஹிட் பாடலான ‘அவள் வருவாளா’ பாடலைப் பயன்படுத்திய விதம் மற்றும் பழைய பள்ளிப் பருவ நினைவுகளை நிகழ்காலப் பயணத்தோடு கோர்த்த விதம் அருமை.

சுரேஷ் குமாரின் படத்தொகுப்பு மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு திரையில் ரசிக்கும்படி உள்ளது.

வித் லவ் திரைப்படம் திரையரங்கில் காதலர்களின் ஆதரவோடு ஜொலிக்கிறது.

  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme