Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

4-வது ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையை ஒன்றிணைத்த காவேரி மருத்துவமனை7050 நபர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

Posted on February 1, 2026

சென்னை, 1 பிப்ரவரி 2026: காவேரி மருத்துவமனை, 4-வது பதிப்பாக நடத்திய ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பகட்டப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய தளமாக இருக்கும் இந்நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பேராதரவோடு வளர்ச்சியடைந்து வருகிறது.
5 கி.மீ மற்றும் 10 கி.மீ என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் உடற்தகுதி குழுக்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களின் உற்சாகமான பங்கேற்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் குறித்த காலஅளவுகளில் உடல்நலப் பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்வது குறித்து இந்நகர மக்களிடையே அதிகரித்து வரும் ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
10 கி.மீ ஓட்டம்: தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
5 கி.மீ ஓட்டம்: காவல்துறையின் சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் திரு. விஜயகுமார் ஐ.பி.எஸ் (IPS) அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: “கடந்த நான்கு ஆண்டுகளில் ‘K10K’ ஓட்டம் இம்மாநகரில் மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. இன்று நாம் காணும் இந்த வலுவான பங்கேற்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நோய் தடுப்பு குறித்த சமூகத்தின் அக்கறையை காட்டுகிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த சென்னை மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை மக்களின் வரவேற்பும், ஆதரவும் எங்களை இன்னும் தீவிரமாக இந்த குறிக்கோளை நோக்கி பயணிக்க ஊக்கமளித்திருக்கிறது.” என்று கூறினார்.


4-வது ஆண்டாக இப்போது நடைபெற்ற K10K ஓட்ட நிகழ்வில் 7000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இது புற்றுநோய் விழிப்புணர்வு, நோய் வரும்முன் தடுப்பு மற்றும் ஆரம்பகட்ட பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்துவதில் சமூகத்தின் கூட்டு முயற்சியை பறைசாற்றுகிறது.
10 கி.மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு வயது பிரிவு மற்றும் பாலின வகையினங்களில் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன. 5 கி.மீ வகையினத்தின் கீழ், முதன்முறையாக பங்கேற்று ஓடியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர்.
K10K புற்றுநோய் விழிப்புணர்வைப் பரப்புவதிலும், நீண்டகால ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் சமூகத்தின் கூட்டு நடவடிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு வலுவாக நினைவூட்டுகிறது.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme