Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Posted on January 4, 2026

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.

‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் , கிரைம் த்ரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளில் இருக்கிறது.

ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா
படதொகுப்பு : ஜான் அபிரகாம்
இசை : அரன் ரே
CEO : டாக்டர் D. அலிஸ் ஏஞ்சல்
ஆக் ஷன் : மிராக்கிள் மைக்கேல்
கலை இயக்கம் : ஜகன் நந்தகோபால் VFX : சந்தகுமார் (Hocus Pocus Studios) ஆடை வடிவமைப்பு : தீப்தி RJ
தயாரிப்பு கட்டுப்பாடு : தனலிங்கம்
DI : பிரசாத் ஸ்டூடியோஸ்
கலர் கிரேடிங் : ரங்கா
ஒலி வடிவமைப்பு : ஆனந்த் ராமச்சந்திரன்
விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு : ரேகா டிஜிட்டல் விளம்பரங்கள் : Digitally Powerful
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்ட ‘ROOT – Running Out of Time’ பட முதல் பார்வை காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme