Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2026
  • அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது
  • News

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது

admin January 1, 2026

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Post navigation

Previous துபாயில் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) க்கு சொந்தமான புதிய பாந்தர் கிளப் Panther Club ஐ, திறந்து வைத்த  கிங் கான் ஷாருக்கான் ! (King Khan Shah Rukh Khan)
Next தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் நேச்சுரல் படமான ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் அதிரடியான மிரளவைக்கும் முதல் பார்வை தோற்றம் புத்தாண்டு தினத்தில் வெளியாகியுள்ளது!

Related Stories

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 
  • News

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 

April 17, 2026
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 
  • News

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 

April 17, 2026
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.