Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

புத்தி க்ளினிக் “நியூரோஃபிரண்டியர்ஸ் 2025” சர்வதேச நரம்பியல் மனநல மருத்துவக் கருத்தரங்கை நடத்துகிறது.

Posted on December 13, 2025

மூளை-மன பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்க INA-GNG கூட்டாண்மை 25 உலகளாவிய நிபுணர்களைச் சென்னைக்கு அழைத்து வருகிறது.

சென்னை, டிசம்பர் 13, 2025 – ஒருங்கிணைந்த நரம்பியல் மனநல மருத்துவதின் மூலமாகவும், முன்னோடியான நோயறிதல் முறையாலும், மேம்பட்ட நரம்பியல் இயல்புமீட்பு திட்டத்தாலும், நரம்பியல் மனநல மருத்துவத்திற்கான ஓர் உலகளாவிய மையமாக சென்னையில் நிறுவப்பட்ட புத்தி க்ளினிக், Neurofrontiers 2025: The INA–GNG Colloquium எனும் கருத்தரங்கை நடத்துகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் & கென்னடி க்ரீகர் நிறுவனம் (USA), ப்ரெளன் பல்கலைக்கழகம் (USA), மெல்போர்ன் பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா), இம்பீரியல் கல்லூரி லண்டன் (UK) மற்றும் பிற உலக முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட 25 நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. அவர்களின் கூட்டு நோக்கம்: சிக்கலான நரம்பியல் மற்றும் நரம்பியல் மனநல பிரச்சனைகளுக்கான மருத்துவ நிலைப்பாடுகளை மறுவரையறை செய்வது.

சர்வதேச நரம்பியல் மனநல சங்கமும் (INA), உலகளாவிய நரம்பியல் மனநலக்குழுவும் (GNG), புத்தி க்ளினிக்குடன் இணைந்து, இந்த அதிக தாக்கம் மிக்க கருத்தரங்கிற்காகக் கூட்டுச் சேர்ந்துள்ளன. இக்கூட்டரங்கு, நரம்பியல் மனநலத்தின் மேம்பாடுகளையும், நோயறிதலையும், உலகளாவிய நரம்பியல் மனநல மருத்துவத்தின் நகர்வோடு ஏற்பிசைவதை உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒருங்கிணைப்பு, புத்தி கிளினிக்கின் இரண்டு தலைமைத்துவ மருத்துவர்களால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர், புத்தி க்ளினிக்கின் நிறுவனரும், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது INA-வின் நீட்டித்த தலைவராகப் பணியாற்றியவருமான திரு. Ennapadam S. Krishnamoorthy ஆவார். மற்றொருவர், புத்தி கிளினிக்கின் நரம்பியல் தொழில்நுட்ப இயக்குநரும், தற்போது INA-வின் நிர்வாகக் குழுவில் பணியாற்றுபவருமான திரு. விவேக் மிஸ்ரா ஆவார்.

புத்தி உரையாடல்: இரண்டாம் நாள் அறிவுசார் உச்சி மாநாடு
இரண்டாம் நாளின் சிறப்பம்சம் – உலகளவில் மதிக்கப்படும் மூன்று மருத்துவ-விஞ்ஞானிகள் பங்கேற்கும் நரம்பியல் மனநல மருத்துவத்தில் புதிய எல்லைகள் குறித்த புத்தி உரையாடல் ஆகும்:
Prof. Jay A. Salpekar (Johns Hopkins University & Kennedy Krieger Institute) – குழந்தைப்பருவ கால்-கை வலிப்பு
Prof. W. Curt LaFrance Jr. (Brown University) – செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள்
Prof. David Coghill (University of Melbourne) – கவனக்குறைவு/அதிக செயல்பாடு கோளாறு

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme