Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அங்கம்மாள் திரை விமர்சனம்

Posted on December 6, 2025

ஆண் ஆதிக்கம் தலை ஓங்கி இருந்த காலத்தில் ஒரு பெண் (கணவனை இழந்த) ஆண் துணை இல்லாமல் தன் குடும்ப சுமையை சுமக்கும் தாயாக மட்டுமல்லாமல் திரையில் தனது கதாபாத்திரம் மூலம் அனைவரையும் அரவணைத்து திரைக்கதையோடு தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் இந்த அங்கம்மாள். பெண் என்பவள் (கணவனை இழந்த) சமுதாயத்தில் தன்னை சார்ந்து வாழும் மக்களின் பார்வைக்கு எண்ணங்களுக்கும் உட்பட்டு வாழ்பவள் என்று தான் அனைவராலும் அறியப்படும் வாழ்க்கை முறை அதற்கு அப்பாற்பட்டு தன் குடும்பம் தன் வாழ்க்கை தன் குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றை முன்னுறுத்தி அங்கம்மாள் கதைக்கும் ஒரு பெண்ணின் உணர்வுக்கும் கதைக்களம் நியாயம் சேர்த்துள்ளது அதற்கு அங்கம்மாளின் நடிப்பு திரையில் காண்பவரை கண்கலங்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார்,இது போன்ற துணிச்சலான பெண்ணின் உணர்வை  குடும்பத்திற்காகவும் தனக்கான கனவுகாகவும் அர்ப்பணிக்கும் பெண்களின் உணர்வை, சேலை மறைவில் பெண்களின் இறுதிச்சடங்கிலும்  பெண்ணின் உடல் சார்ந்த உன்னதத்தை உலகிற்கு சொல்லும் திரைக்கதையே அங்கம்மாள்.

கிராம வாழ்க்கை சூழலில் ஒரு பெண் அங்கம்மாள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை திரைக்கதையாக அனைவரும் ரசிக்கும் படி திரையில் கொடுத்துள்ளார் இயக்குனர். கிராமத்தில் வாழும் மக்கள் தனது குழந்தைகளிடம் அவர்கள் என்னும் உயர்ந்த படிப்பான் கலெக்டர் மற்றும் டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அது போன்ற ஆசையை அங்கம்மாள் தனது இரண்டாவது மகனான  பவளமுத்து (சரண்) கொண்டு தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார் அங்கம்மாள் அவர் ஆசைப்படும் தனது தாயின் இன்றைய நாகரீகத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார் தனது நகரத்தில் வாழும் காதலி குடும்பத்திற்காக, நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான் அங்க மாலினி இளைய மகன்.

ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழுவதும் ரவிக்கை போட்டதே இல்லை. இந்நிலையில் திருமணம் பேச ஜாஸ்மின் வீட்டார் அவர்கள் வீட்டிற்கு வரும் நாள் நெருங்குகிறது அதனால் அவளமுத்து தனது தாயாரை ரவிக்கை அணியும்படி தன் குடும்பத்தாருடன் சேர்ந்து வற்புறுத்துகிறார் டாக்டர் பவளமுத்து.

அங்கம்மாள் இளைய மகன் டாக்டர் பவளமுத்துவின் நாகரீக வாழ்க்கை முறைக்கு மாறி அங்கம்மாள் ரவிக்கை போட்டுக்கொண்டாரா, இல்லையா?
இளைய மகன் பாலமுத்துவின் காதல் திருமணம் நடைபெற்றதா?
அங்கம்மாள் நாகரீக உடை அணிந்து தன்னை மாற்றிக் கொண்டாரா?
அங்கம்மாளின் மூத்த மகன் வாழ்வியல் ஏன் மாற்றம் செய்யவில்லை?
அங்கம்மாள் மற்றும் அவரது மூத்த மருமகளின் வாழ்க்கை முறை எந்த உணவை ஏற்படுத்தியது?
அங்கம்மாள் திரையில் காண்போரை தங்கள் தாயாகவும் தங்களின் பாட்டியாகவும் பார்த்து ரசிக்க வைத்து சிந்திக்கவும் வைத்துள்ளார்!!!!
இதுபோன்ற கேள்விக்கு பதில் உங்கம்மாளின் திரைக்கதை.

இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, திரையில் திரைக்கதையோடு நம்ம ரசிக்க வைத்துள்ளது

. படத்தொகுப்பாளர் பிரதீப் சங்கர், அங்கம்மாளின் மனதையும், அவரது எண்ணங்களையும் திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme