Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

Posted on November 29, 2025

*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!*முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.  இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது. பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர்  மிஷ்கின், கதிர், பார்த் திவாரி  மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.தொழில் நுட்ப குழு விபரம்ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித் இசை – ஜேக்ஸ் பெஜாய்படத்தொகுப்பு – சமன் சக்கோதயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சாலிசேரிஒப்பனை – ரோனெக்ஸ் சேவியரஆடை – மாஷர் ஹம்சாபுரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார்VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்ஸ்டில்ஸ் – எஸ்.பி.கேமக்கள் தொடர்பு – யுவராஜ்

  • சென்னையில் அமேசான் ஊழியர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி
  • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme