Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கல்வியாளர் டாக்டர் திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு

Posted on November 27, 2025

கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கினார்

தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் புதன்கிழமை (நவம்பர் 26) மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை (Dr Mrs YGP Award of Cultural Excellence) வழங்கி கௌரவித்தார். திருமதி கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக திரு வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றிய திருமதி சுந்தரி சங்கரன், திருமதி சந்திரா ரமணி மற்றும் திருமதி விஜி கண்ணன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

நாட்டிய நிபுணர் டாக்டர் பத்மா சுப்ரமணியம், வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ், வயலின் கலைஞர் லால்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ஏ ஆர் எஸ் காணொலி மூலம் உரையாற்றினார். ஒய் ஜி மதுவந்தி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒய் ஜி மகேந்திரா மற்றும் சுதா மகேந்திரா தலைமையிலான பாரத் கலாச்சார் ஆலோசனைக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme