
கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவினின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியிருக்கும் படம்தான் மாஸ்க். அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சொக்கலிங்கமுடன் இணைந்து இப்படத்தை ஆண்ட்ரியா தயாரித்துள்ளார்.

வேலு (கவின் மாஸ் திரைப்படத்தில் டிடெக்டிவாக இருக்கும் கதாநாயகன் திரையில் கலக்கியுள்ளார் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார். வாடிக்கையாளர்களிடம் மட்டுமின்றி யார் தன்னிடம் சிக்கிக்கொள்கிறார்களோ, அவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பது சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இந்த வேலு. .
பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக நடக்கும் தவறை எதிர்த்து போராடி, அவர்களை மீட்டு நல்வாழ்வு அமைத்து தரும் நபராக என்ட்ரி கொடுக்கிறார் பூமி (ஆண்ட்ரியா). அவர்களை நன்றாக படிக்கவும் வைக்கிறார். வெளியே இவருக்கு இப்படி ஒரு முகம் இருந்தாலும், இவருக்கு வேறொரு முகமும் உள்ளது.தன்னிடம் உள்ள பெண்களை வைத்து அரசியல் வாதிகளின் தேவையை பூர்த்தி செய்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொள்கிறார்(ஆண்ட்ரியா).
MLA தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி பவன், பூமியிடம் ரூ. 440 கோடியை கொடுத்து தொகுதி முழுவதும் இந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் அனுப்பவேண்டும் என கூறுகிறார்.பணத்தை தனது சூப்பர் மார்க்கெட்டில் பூமி பதுக்கி வைக்க, அந்த சூப்பர் மார்க்கெட்டை எம்.ஆர். ராதா மாஸ்க் போட்டுக்கொண்டு ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது.
440 கோடி கொள்ளையடித்தவர்களுக்கும் அரசியல்வாதி பவனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
பூமியிடம் ஒப்படைக்கப்பட்ட 440 கோடி மீட்கப்பட்டதா?
டிடெக்டிவாக கவின் ஆண்ட்ரியாவுக்கு எந்த வகையில் உதவுகிறார்?
சார்லி தனது நண்பர்களுக்கும் ஏற்படும் அவலங்களை எதன் மூலம் வழி தீர்க்கிறார்? இது போன்ற கேள்விக்கு பதிலே மாஸ்கின் திரைக்கதை.
சிறையில் இருக்கும் நாயகி தன்னுடைய தேவையை பூர்த்தி செய்ய, தனது புத்தியை பயன்படுத்தி மற்றவர்கள் மூலம் அதை செய்து கொள்ளும் ஆண்ட்ரியாவின் நடிப்பு திரையில் ரசிக்க வைத்துள்ளது. அதே போல், கவின் – ஆண்ட்ரியா மோதிக்கொள்ளும் இடங்களில் வசனம் காட்சிகளும் நன்றாக இருந்தது. படத்தில் வரும் பல கதாபாத்திரங்களுக்கு நல்லவன், நல்லவள் என்கிற முத்திரை இல்லாமல், அனைவரும் காலத்திற்கு ஏற்ப சுயநலவாதிகள் என திரைக்கதையாக அமைத்துள்ளது திரைப்படத்திற்கு பக்க பலம்.
.
.
.