Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!

Posted on October 9, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய திரைத்துறை நட்சத்திரங்களுடன் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடினார். சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கு பெயர் பெற்ற டாக்டர் ஐசரி கணேஷ் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க இயலாத ஆளுமையாக வலம் வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மாலை வேளையில் ‘வேல்ஸ் மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபலமான இசைக்கலைஞர்கள், சுயாதீன கலைஞர்கள் மற்றும் புது திறமையாளர்களுக்கான களத்தை உருவாக்கும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக்’ செயல்படும். மேலும் இந்தத் தளம் கிரியேஷன், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தையும் கவனிக்கும்.

இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர், பிரபுதேவா, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், விஜய், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, நெல்சன், ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, லலித், நடிகர்கள் அருண் விஜய், கீர்த்தி ஷெட்டி, மீனா, பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், தமிழ்குமரன், கே.பாக்யராஜ், வசந்த் ரவி, ரெஜினா கேசண்ட்ரா, ஆதித்யராம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு வெறுமனே பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் நட்பு, படைப்பு, கொண்டாட்டம் என இந்திய இசையின் புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைத்துள்ளது.

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து
  • அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
  • Ravi Mohan Unveils the First Look of Vaibhav’s Spiritual Action Entertainer ‘Manikanda’!
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி!
  • நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme