Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!

Posted on October 9, 2025

தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.

இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் ‘ரெட் ஃபிளவர்’ மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது இசையில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இந்தப் பாடலையும் அதில் வேலை பார்த்தவர்களையும் ரசிகர்கள் நிச்சயம் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இத்தருணத்தில், நான் எனது முதல் பட இயக்குநர் மறைந்த திரு. கணேஷ் ராஜா அவர்களை நினைவு கூறுகிறேன்” என்றார்.

மேலும் நடிகர் தனுஷிற்கும் ‘இட்லி கடை’ படக்குழுவினருக்கும் படத்தின் வெற்றிக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். படத்தின் அர்த்தமுள்ள கருத்துகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாகவும் விக்னேஷ் தெரிவித்தார்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme