
வரலாற்று சிறப்பு வாய்ந்த திரை காவியமாக மிராய் திரையில் ஜொலிக்கிறது , திரை கதை கி.மு 232-ல் கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு வில்லன்.
திட்டம் அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதை அழிக்க ஒரு வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார்.
அதோடு அம்மா பாசம் இல்லாமல் தான் யார் என்றே தெரியாமல் மகனை அனாதையாக விட வேண்டும், அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பதே விதி.
இதற்காக ஸ்ரேயா தன் மகனை அனாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார். அதை தொடர்ந்து 24 வருடம் கழித்து ஹீரோயின் ரித்திகா, ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்க,
பிறகு என்ன தேஜா மிராஜை அடைந்தாரா?
புனிதமான 9வது புத்தகத்தை காப்பாற்றினாரா ?
ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க? போன்ற கேள்விக்கு பதிலாக பேண்டசி காவியமாக திரையில் ரசிக்க வைத்துள்ளது இந்த மிராஜ்.