Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சவுத் இந்தியா செஃப்ஸ் அசோசியேஷன்(SICA) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான SICA கலினரி ஒலிம்பியாட் மற்றும் உணவு போட்டிகளின் 7 வது பதிப்பு செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதூ.

Posted on September 8, 2025

சவுத் இந்தியா செஃப்ஸ் அசோசியேஷன்(SICA) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான SICA கலினரி ஒலிம்பியாட் மற்றும் உணவு போட்டிகளின் 7 வது பதிப்பு செப்டம்பர் 19 ஆம் தேதிதொடங்கவுள்ளதாக SICA – வின் தலைவர் பத்மஶ்ரீ. செஃப் தாமு மற்றும்பொதுச்செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னை, தி பார்க் நட்சத்திர விடுதியில், சமையல் கலையின் தனித்த அடையாளமாக திகழும் பத்மஶ்ரீ செஃப் தாமு, செஃப் சீதாராம் பிரசாத் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது,
SICA கலினரி ஒலிம்பியாட் 2025, வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் செஃப்ஸ் சொசைடீஸ் – WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் போட்டி என்று தெரிவித்தனர். இந்த ஒலிம்பியாட் மற்றும் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், செப்டம்பர்
19 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) தனது 7 வது பதிப்பான தொழில்துறையின் மிக முக்கியமான சமையல் நிகழ்வான SICA கலினரி ஒலிம்பியாட் மற்றும் கண்காட்சி 2025 – ஐ 19 ஆம் காலை 8 மணிக்கு 3 அடுக்கு திருமண கேக் தயாரிப்பு போட்டியில் இருந்து தொடங்குகிறது.

அகார் சர்வதேச உணவு கண்காட்சி 2025 இன் சென்னை மண்டல பதிப்பின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO – INDIA TRADE PROMOTION ORGANIZATION) மற்றும் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANIZATION) ஆகியவை ஆதரவளிக்கின்றன.

முதற்கட்டமாக, தொழில்முறை போட்டியை அணுகுவதற்கான தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்தும் வகையில் பேஸ்ட்ரி கலை மற்றும் ஹாட் பிளேட் விளக்கக்காட்சி குறித்த பட்டறைகளை SICA ஏற்கனவே நடத்தியுள்ளது. அதில், செஃப் கில்ட் ஆஃப் லங்காவைச் சேர்ந்த மாஸ்டர் சமையல் பயிற்சியாளரான செஃப் திமுத்து குமாரசிங்கே, இலங்கையைச் சேர்ந்த 4 பேரைக் கொண்ட தனது குழுவுடன் உணவு பூசும் நுட்பங்களின் கலையை நிரூபித்துள்ளார்.

தற்போது நடைபெறவுள்ள ஏழாவது பதிப்பின் முக்கிய அம்சங்காக, செய்தியாளர் சந்திப்பில் செஃப் தாமு மற்றும் சீதாராம் பிரசாத் ஆகியோர், இது WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய போட்டி என்றும், .WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடுவர் மன்றம் போட்டிகளை தீர்மானிக்கும் என்றும் கூறினர்.

தென்னிந்தியாவில் 3000 க்கும் மேற்பட்ட சமையல்கலைஞர்கள் மற்றும் மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

மேலும்,
சமையல் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார்கள், உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து மூத்த மற்றும் பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்த ஒலிம்பியாட்டில்,
மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான நேரடி சமையல் சவால் போட்டிகள், எக்ஸ்க்ளூசிவ் காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் போட்டிகள், விருந்தோம்பல் தொழிலில் நிலைத்தன்மை மீது கவனம் செலுத்தும் வீட்டு பராமரிப்பு நிபுணர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

நிறைவு நாளில் பிரமாண்ட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், பிரபல சமையல் வல்லுனர்களான,
சஞ்சீவ் கபூர், பத்மஸ்ரீ டாக்டர் செஃப் தாமோதரன், சஞ்சய் துமா மற்றும் பலர் பங்குபெற உள்ளனர்.

குறிப்பாக, டபரா காபியின் சிறப்புப் போட்டி, நேரடி இனிப்பு சவால் உள்ளிட்டவை இந்த ஆண்டு நிகழ்வை மேலும் சுவாரஸ்யமாக்க உள்ளன என்றும்,
ஆசிய மற்றும் மேற்கத்திய சமையல் போட்டிகளும் இடம்பெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

போட்டிகள், தனிநபர் சமையல் கலை காட்சி போட்டி, மற்றும் குளிர் காட்சி போட்டி, நேரடி செய்முறை சமையல் போட்டி, ஒயின் கண்ணாடி அலங்கார போட்டிகள், 2 நபர்களுக்கான மேசை மேம்பாட்டு போட்டி, சமையல் குழு சவால்- பஃபே மற்றும் ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன என்று கூறிய செஃப் தாமு, இது தென்னிந்த சமையல் வல்லுனர்களின் தனித்த அடையாளமாக இருக்கும் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்மஸ்ரீ. செஃப் தாமோதரன் -தலைவர் SICA, செஃப். ஷீத்தாராம் பிரசாத்- பொதுச் செயலாளர் SICA, செஃப். அஜீத் ஜனார்த்தனன் – துணைத் தலைவர் TN SICA, செஃப்.காசி விஸ்வநாதன் – துணைத் தலைவர் கர்நாடகா SICA, செஃப்.சுதாகர் என் ராவ்- VP தெலுங்கானா SICA, செஃப்.திருலோகசந்தர் -VP ஆந்திரா SICA, செஃப்.மோகன கிருஷ்ணன் A. K. – பொருளாளர் SICA, செஃப்.ராஜேஷ்ராதாகிருஷ்ணன்- GM தி பார்க் ஹோட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme