Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காந்தி கண்ணாடி திரை விமர்சனம்

Posted on September 5, 2025

இன்றைய தலைமுறை காதலையும் மூத்த தம்பதியராக காந்தி, கண்ணம்மா கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா அவர்கள் காதலை திரையில் ரசிக்கும் படி அவர் நடித்துள்ளார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த பாலா இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில்(கதாநாயகனாக) கதையின் நாயகனாக திரையில் ஜொலிக்கிறார்.

தனது சொந்த ஊரில் ஜமீன் தாரக வாய்ந்துவருகிறார் காந்தி கண்ணமா என்ற  பெண்ணை காதலிக்க தனது காதலுக்காக ஊரை விட்டு இருவரும் ஓடி வருகின்றனர் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றது அப்போது கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் ஒன்றிற்கு செல்கின்றனர். அந்த கல்யாணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தா இதுபோல் நமக்கும் ஒரு திருமணம் செய்து வைத்திருப்பான் என காந்தியிடம் ஃபீல் பண்ணுகிறார். காந்தியின் உலகமே கண்ணம்மா தான், அவரின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறார் காந்தி. இதற்காக ஊரில் இருக்கும் தனக்கு சொந்தமான ஜமீன் சொத்தை பாலாவின் உதவியுடன் விற்று 80 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்கிறார்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கல்யாணத்திற்கான  வேலைகளை செய்யும்  இளம் காதல் ஜோடியான கதிர் மற்றும் கீதாவை  அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர் அப்போது ஒரு சிக்கல் வருகிறது. இதனால் அறுபதாம் கல்யாணம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தடைகளை மீறி அந்த கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்….

கிளைமாக்ஸில் நடு ரோட்டில் பாலா ஆடும் ஆட்டம் கண்களை கலங்க வைக்கிறது. கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரதை  சிறப்பாக செய்துள்ளார். .

அமுதவாணன், மதன், நிகிலா ஆகியோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஜெய் கிரண் தயாரித்துள்ளார். விவேக் மெர்வின் இசை படத்திற்கு பக்கபலமாக  உள்ளது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குறைந்த அளவிலான நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு குடும்பத்தையே கவரும் வகையில் படத்தை இயக்கிய ஷெரிப், முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme